உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!

கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசித்து வரும் நிலையில், அதற்கேற்றாற் போல, அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இந்திய வம்சாளியினரான அனிதா ஆனந்த், மனீந்தர் சித்து, ரூபி சஹோதா, ரந்தீப் சாராய் ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அனிதா ஆனந்த், வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்த், 1967ம் ஆண்டு மே 20ம் தேதி கென்ட்விலேவில் பிறந்தார். இவரது தந்தை தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர். கடந்த முறை தொழில்துறை, அறிவியல் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த்,57, பதவி வகித்து வந்தார். தற்போது, முக்கிய துறையான வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், வெளியுறவுத்துறை அமைச்சராக ஒரு ஹிந்து முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக, பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் கவனித்து வந்துள்ளார்.

மனீந்தர் சித்து, சர்வதேச வர்த்தகத்துறை

பிராம்டன் கிழக்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மனீந்தர் சித்து, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக வரி உயர்வு அச்சுறுத்தலை மேற்கொண்டு வரும் நிலையில், இவரது துறையின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சித்து பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதிலேயே பிராம்டனுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். டோரன்டோ பல்கலையில் பட்டப்படிப்பை படித்து முடித்தார்.

ரூபே சஹோதா, குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மாநிலச் செயலாளர்

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மாநில செயலாளராக ரூபி சஹோதா,44, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் பிராம்ப்டன் வடக்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார். டொராண்டோவில் குடியேறிய பஞ்சாபி பெற்றோருக்குப் பிறந்தவர். சஸ்காட்செவன் பல்கலையில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

ரந்தீப் சாராய், சர்வதேச மேம்பாட்டுக்கான மாநில செயலாளர்

ரந்தீப் சாராய், 59, கனடாவின் சர்வதேச மேம்பாட்டுக்கான மாநில செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். வெளிநாட்டு உதவி முயற்சிகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை மேற்பார்வையிடுகிறார். அவர் சர்ரே மையம் தொகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4வது முறையாக எம்.பி.,யாகியுள்ளார். அதிகபட்சம்நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கார்னேவின் லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் மொத்தம் 22 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Narasimhan
மே 15, 2025 19:19

எப்போது அவர்கள் அந்த நாட்டின் பிரஜைகளாக மாறிவிட்டார்களோ அப்போதே அவர்கள் இந்தியர்கள் இல்லை என்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?


J.Isaac
மே 15, 2025 17:21

இதனால் இந்திய பாமர மக்களுக்கு என்ன உபயோகம்?


gvr
மே 15, 2025 17:16

All Khalistani supporters


என்றும் இந்தியன்
மே 15, 2025 16:45

இந்தியர்கள் ஒருக்காலும் கனடா அமைச்சரவையில் இருக்கமுடியாது. அவர்கள் ஒருகாலத்தில் பிறந்தது இருந்தது இந்தியாவாக இருக்கலாம். இந்த மாதிரி புலம் பெயர்ந்தவர்கள் குணம் முஸ்லீம் கிருத்துவன் குணம் போலவே இருக்கும், நாம் எந்த மதத்தை சார்ந்தவர்களோ அந்த மாதத்திற்கு விசுவாசமாக மற்றவர்களுக்கு அதனால் பல தொல்லைகள் செய்ய வேண்டுமானால் தை எய்ய தயாராக இருப்போம் அதை போல இப்போது இந்தியர்களாக ஒரு காலத்தில் இருந்த இவர்கள் இந்தியாவிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள் தாங்கள் கனடா நாட்டிற்கு மிக மிக மிக விசுவாசமாக உள்ளோம் என்று காண்பிப்பதற்காக. இதற்க்கான சிறந்த உதாரணம் கனடா சீக்கியர்கள்


Theven
மே 15, 2025 10:58

அனிதா ஆனந்த் அம்மணிக்கு , எமது இதய பூர்வமான நல் வாழ்த்துக்கள். ஆண்டவன் அருளால் தங்கள் சேவை சிறப்பாக அமையுமாக மற்றவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.


J.Isaac
மே 15, 2025 17:34

இந்திய குடியுரிமை உண்டா ?


babu
மே 15, 2025 10:47

இந்தியர்கள் அல்ல கனடா நாட்டினர்


Raja k
மே 15, 2025 10:46

ஆனால் காலிஸ்தான்கள் 22 பேர் வெற்றி பெற்று உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும், இவர்களின் நாடாக கனடா விரைவில் மாற போகிறது, இந்தியர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என அடிக்கடி அங்கே போராட்டம், போர்குரல் நடக்கிறது என்பதை மறுக்க முடியாதே,


மீனவ நண்பன்
மே 15, 2025 10:15

மஞ்சப்பையோடு டிக்கட் வாங்காம கப்பலிலோ விமானத்திலோ இவர்கள் மூதாதையர்கள் வந்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்


PR Makudeswaran
மே 15, 2025 15:18

மஞ்சள் பை பித்தலாட்டம் இல்லை. மஞ்சள் பையை பயன்படுத்தியவர்களில் ஒன்றிரண்டு பேர் பித்தலாட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை