உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் கோர விபத்து; தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கோர விபத்து; தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெக்சாஸ்: அமெரிக்காவில் நிகழ்ந்த கோரமான கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.

காரில் பயணம்

இதுபற்றிய விவரம் வருமாறு; டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அர்கான்சாஸ் நோக்கி கார் ஒன்றில் தர்ஷினி வாசுதேவன், ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகிய 4 பேரும் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் தர்ஷினி வாசுதேவன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

காரில் மோதல்

காலின்ஸ் கவுண்டி என்ற பகுதியில் அவர்கள் பயணித்த கார் வந்து கொண்டிருந்த போது அசுர வேகத்தில் வந்த லாரி மோதியது. லாரி மோதிய வேகத்தில் 4 பேரும் இருந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. அப்போது அடுத்தடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த 4 வாகனங்கள் கார் மீது மோத, தீப்பிடித்தது. மளமளவென கார் முழுவதும் தீ பரவியதால் உள்ளே 4 பேரும் சிக்கிக் கொண்டனர்..

உடல்கருகி பலி

வெளியே வர எவ்வளவோ முயற்சித்தும் முடியாததால் உள்ளேயே மூச்சுத் திணறி 4 பேரும் பலியாகினர். போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். காரில் இருந்த 4 பேரும் ஒருவரை ஒருவர் முன்பின் அறியாதவர்கள் என்பது தெரிய வந்தது.

வாடகை கார்

4 பேரும் மொபைல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றபோது தான் கோர விபத்து நிகழ்ந்தது. செயலி மூலம் மேலும் பல தரவுகளை சேகரிக்கும்போது தான், பிரிஸ்கோ பகுதியில் தங்கியிருந்தபடி டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தர்ஷினி வாசுதேவன் உயர்கல்வி பயின்று வந்ததும், உறவினர் ஒருவரைக் காண காரில் சென்றதும் தெரிய வந்தது.

மரபணு சோதனை

இதேபோன்று தான், லோகேஷ் பலசார்லா மனைவியைச் சந்திக்க பென்டன்விலுக்கும், ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி டெல்லாசில் உள்ள தமது உறவினரை பார்த்துவிட்டு நண்பர் ஷேக் என்பவருடன் திரும்பிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், மரபணு சோதனை முடிவுகள் படி அடையாளம் காணப்பட்டு உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 04, 2024 18:07

ஓம் ஷாந்தி.


நிக்கோல்தாம்சன்
செப் 04, 2024 16:55

வேதனையா இருக்கு


Tiruchanur
செப் 04, 2024 16:24

ஓம் ஷாந்தி. தர்ஷிணி மற்றும் மற்ற இரண்டு ஹிந்துக்களின் பெற்றோர்கள் நிலைமையை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. ஷேக் பற்றிய கவலை இல்லை. 10 பேர் அண்ணன் தம்பி இருப்பாங்க


Swaminathan
செப் 04, 2024 20:08

இந்த கருத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இறந்த பிறகு ஹிந்து, முஸ்லீம், என்ற பாகுபாடற்ற நிலைக்குத் தான் ஒவ்வொரு ஆத்மாவும் செல்லும். இதைத் தான் உண்மையான ஹிந்துயிசம் கடைபிடிப்பவர்கள் நம்பி சொல்வார்கள். அகால மரணத்தை எய்திய எல்லா ஆத்மாக்களும் ஷாந்தி அடைய இறைவனை ஒன்று சேர்ந்து பிரார்த்திப்போமாக. ஓம் ஷாந்தி.


கத்தரிக்காய் வியாபாரி
செப் 05, 2024 12:18

நீங்கள் ஹிந்துவாக இருக்க லாயக்கில்லை.


s sambath kumar
செப் 04, 2024 15:11

இங்கே மாதிரி அங்கேயும் குடித்து விட்டு அந்த டிரக் டிரைவர் ஓவர் ஸ்பீடில் வந்ததால் வினை. லக்ஷ்ணமா இருக்கும் இந்தப் பெண்ணின் முடிவும் மீதி மூன்று பேரின் முடிவும் மிகவும் வருத்தமாயிருக்கு. எவ்வளவோ கனவுகளோடு அமெரிக்கா போறாங்க. கடவுள் அவர்களுக்கு மனசாந்தியையும் பெற்றோர்களுக்கு மன ஆறுதலையும் தரட்டும்.


Ramesh Sargam
செப் 04, 2024 12:40

மிகவும் வருத்தமான செய்தி. பெற்றவர்களின் இதயம் எப்படி துடிக்கும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் எப்படி வருத்தப்படுவார்கள். இது விதி என்று சொல்வதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை