உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க் அலுவலக கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

நியூயார்க் அலுவலக கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளி தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள மிட் டவுன் மன்ஹாட்டனின் அலுவலகம் கட்டடம் உள்ளது. 634 அடி உயரமுள்ள இந்த வானளாவிய கட்டடத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:மிட் டவுன் மன்ஹாட்டனில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் நியூயார்க் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். 27 வயதான சந்தேக நபர் ஷேன் தமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tiruchanur
ஜூலை 29, 2025 16:48

ரொம்ப இடம் குடுத்துட்டானுங்க அமெரிக்கா காரனுங்க. இனி செத்தானுங்க


Tiruchanur
ஜூலை 29, 2025 16:47

அமெரிக்காவில் இருக்கும் பாரதியர்கள் தாய்நாட்டுக்கே திரும்பி வருவது நல்லது


Ramesh Sargam
ஜூலை 29, 2025 13:04

நடுரோட்டில் எவ்வளவு தைரியமாக துப்பாக்கி எடுத்து செல்கிறான். இந்த துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு காணாமல், உலகில் உள்ள நாடுகளை சிண்டுமூட்டி, போரை துவக்குவது. பிறகு ஒன்றும் தெரியாததுபோல் போரை முடிவுக்கு கொண்டுவருகிறேன், எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பது ட்ரம்பின் செயலாகிவிட்டது.


sankaranarayanan
ஜூலை 29, 2025 11:15

உலகில் மற்ற நாடுகளிடையே சண்டையை மூட்டி விட்டு பிறகு சமாதானம் செய்கிறேன் நான் என்று கூறி தனக்கு ஆஸ்கார் விருத்திற்கு நீங்கம்தான் சிபாரிசு செய்ய வேண்டும் என்றே ஒரே குறிக்கோளுடன் வாழும் டிரம்ப்புக்கு இதை அடக்க முடியவில்லையே


Ravichandran C
ஜூலை 29, 2025 07:55

தீவிரவாத தாக்குதலா? இந்த மாதிரி சிறு சிறு தாக்குதல் நடத்த அமைதி மார்க்கத்தார் பயிற்சி அளித்து இருக்கலாம். எனவே அமெரிக்க துப்பாக்கி கலாசாரம் ஒழிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி


சமீபத்திய செய்தி