வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உள்ளூர் போலிஸாரா ?
டெக்சாஸ்; அமெரிக்காவில் வாகன விபத்தில் 5 பேர் பலியாகினர். 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.இதுபற்றிய விவரம் வருமாறு; டெக்சாஸ் அருகே ஹவார்ட்-பார்மர் இடையிலான சாலையில் டிரக் ஒன்றும் மற்ற வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதின. விபத்தில் மொத்தம் 17 வாகனங்கள் மோதிக் கொண்டன.கோர விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். 17 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 17 பேரில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மீட்புக்குழுவினர் கூறினர்.விபத்துக்கான காரணம் என்பது பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த கோர சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் போலீசார் கூறி உள்ளனர்.
உள்ளூர் போலிஸாரா ?