உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 5 ரூபாய் பிஸ்கட் காசாவில் ரூ.2,400க்கு விற்பனை

5 ரூபாய் பிஸ்கட் காசாவில் ரூ.2,400க்கு விற்பனை

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 அப்பாவி பொது மக்களை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் துவங்கியது. கடந்த 20 மாதங்களாக காசாவில் தாக்குதல் நடந்து வருகிறது.இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கான உணவு, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகள் வழங்க முன் வந்த நிலையில் அதற்கு இஸ்ரேல் தடை விதித்தது. கடந்த இரு வாரங்களாக மட்டுமே அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், காசாவைச் சேர்ந்த முகமது ஜாவத் தன் குழந்தைக்கு பிடித்தமான பார்லே -- ஜி பிஸ்கட்டை வாங்கி தந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன் விலை தற்போது 2,400 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இருப்பினும் குழந்தையின் ஆசைக்காக வாங்கி தந்தாக அதில் கூறியுள்ளார். இதை பார்த்து பலர் தங்கள் ஆச்சர்யத்தையும், கவலையையும் வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

கிருஷ்ணதாஸ்
ஜூன் 08, 2025 00:38

தீவிரவாதிகளுக்கு இதாவது கிடைக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள்…


Rathna
ஜூன் 07, 2025 12:47

1950-60 களில் மலேசியாவின் ஜிஹாதிய ஆதிக்கத்தில் இருந்து பிரிந்து சாதாரண நாடாக இருந்த ஏழ்மையான நாடு சிங்கப்பூரை, தங்கப்பூராக மாற்றியது அரசியல் தலைமை - லீ குவான் யு. இஸ்லாமிய எண்ணெய் ஆதிக்க பணம் கொழித்தும் காசாவை பிச்சைக்கார நாடாக ஜிஹாதிகள் தனது இன மற்றும் மத வெறுப்பால் மாற்றி விட்டனர். இது தான் பாகிஸ்தானிலும் பங்களாதேஷில் இப்போது நடக்கிறது. இதில் இருந்து மீள வழியில்லை.


தமிழ்வேள்
ஜூன் 07, 2025 10:08

இறைத்தூதரின் புத்தகத்தை பிடித்து தொங்கும் வரை உலகில் மார்க்க மூர்க்க பயங்கரவாதம் குறைவதற்கு வாய்ப்பு நஹி...


theruvasagan
ஜூன் 07, 2025 09:35

5 ரூபாய் பிஸகட் பாக்கெட்டை 2400 கொடுத்து வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இருக்கிறது என்றால் பணப்புழக்கம் தாராளமாக உள்ளதாகதானே அர்த்தம். அந்த பணமெல்லாம் எங்கிருந்து எப்படி வந்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். சாமானியன் கையிலேயே இவ்வளவு பணம் இருக்குமானால் தீவிரவாதிகளிடம் எவ்வளவு இருக்கும்.


ஆரூர் ரங்
ஜூன் 07, 2025 09:19

இவர்களுக்கு சுற்றியுள்ள அரபு நாடுகள் கூட அடைக்கலம் அளிக்கவில்லை. குரல் கொடுக்கும் யாரும் இடம் கொடுப்பதில்லை. அவர்களிடம் இல்லாத வசதியா?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 07, 2025 08:27

அது 4000 ஆனாலும் நாம் கவலைபடவோ பச்சாதாபபடவோ வேண்டியதில்லை காரணம் அதை அவர்களாக தேடிக்கொண்டது..... ஹமாஸ் எனும் தீவிரவாத இயக்கத்திற்கு பாலிஸ்தீனியர்கள் ஆதரவு கொடுப்பதால் அதன் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு.... தம்மால் முடியாது என்று தெரிந்தும் பக்கத்து இஸ்லாமிய நாடுகளின் உசுப்பேத்தலால் சும்மா கிடந்த இஸ்ரேலை சீண்டியதினால் வந்த விளைவை அனுபவித்து தான் ஆகவேண்டும்....1200 பேரை கொன்று 200 பேரை சிறைபிடித்ததின் விளைவு 54000 பேருக்கு மேல் இழப்பு .....இப்போதாவது திருந்தினார்களா என்றால் இல்லை என்பதே பதில்.... உலகநாடுகள் ஏதாவது செய்து இப்போரை நிறுத்துவார்கள் என்று நினைத்தால் அது அவர்களின் அறியாமை..... நீங்கள் ஹமாஸுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தி அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் போர் தன்னால் அடங்கும்....இது தான் போரை நிறுத்த ஒரே தீர்வு.....!!!


RAMESH
ஜூன் 07, 2025 11:52

நிதர்சனமான உண்மை


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 07, 2025 08:18

இந்த செய்தி தமிழகம் என்ற தலைப்பின்கீழ் வந்துள்ளதே .ஆர்வ கோளாறா இல்லை கவனக் கோளாறா


ராம்
ஜூன் 07, 2025 07:51

நம் நாடு சொர்க்க பூமி என்பது உண்மை, இதை உணர மறுக்கும் 200ரூபாய் கொத்தடிமை ஊபீஸ்கள். நம் தேசத்தில் மட்டும் தான் பெட்ரோல் டீசல் விலை கடந்த பத்து வருடங்களாக ஒரே சீரான விலையில் இருக்கிறது, இந்த உண்மையை மறுத்து பொய் செய்திகளை பரப்பும் கொத்தடிமை ஊபீஸ் தொல்லை காட்சிகள். பெட்ரோல் டீசல் விலை ஏறினாலும் சரி ஜீஎஸ்டி வரியும் கட்ட தயார் காரணம் கடந்த பத்து வருடங்களாக இராணுவம் அபரீதமான வளர்ச்சி இரயில்வேயின் வளர்ச்சி ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வளர்ச்சி என சொல்லி கொண்டே போகலாம். நாம் கொத்தடிமை ஊபீஸ்கள் பற்றி கவலை பட தேவையில்லை காரணம் அதுக கட்டுமர காலத்திலிருந்தே அறிவாலய வாசலில்.....


கனோஜ் ஆங்ரே
ஜூன் 07, 2025 10:33

///இதை உணர மறுக்கும் 200ரூபாய் கொத்தடிமை ஊபீஸ்கள்// அண்ணாத்தே.... உன்னைப் போன்ற 'மதம்' பிடித்த மனிதர்கள் உள்ள நாடா இது...? இந்த மண்... இது சமத்துவமும், சகோதரத்துவமும் ஊறிய மண்... உன்னைப் போன்றவும் மற்ற மதத்தினரைப் போலவும், காசா போன்ற நாட்டில் உள்ள 'மதவெறியர்கள்' உள்ள நாடா இது... ஞானிகளும், யோகிகளும், அகிம்சாவாதிகளும், இராமானுஜரும் - புத்தனும் - காந்தியும் தோன்றிய மண்... இங்கே சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த மண்... இங்கே வேற்றுமையில் ஒற்றுமை காணும் மண்... “ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு, கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு, சுத்தமாக சொன்ன தெல்லாம் போதலியா, மொத்தமாக காதுல தான் ஏறலியா...? அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா, முஸ்லிமா இல்லை இந்துவா...? உன்னைப் போன்ற மதவெறியர்களும், மதவாதிகளும் இருந்தாலே போதும், காசாவில் நடப்பதுதான் இங்கேயும் நடக்கும்... இங்கேயும் இதுபோல மதஈடுபாடு அதிகமாகி இதுபோன்ற துர்பாக்கிய நிலை ஆகணும்..னு இதுக்குத்தானே நீ ஆசைப்படுற...


karupanasamy
ஜூன் 07, 2025 11:42

தம்பி கனோஜ் ஆங்க்ரே தயவு செய்து பெயரை மாத்திக்கப்பா. இசுலாமிய காம வெறியன் அவுரங்கசீப்பை ஆயுதம் ஏதும் இல்லாமல் வயிற்றை கிழித்து கொன்ற மாமன்னன் சிவாஜி தோன்றிய மராத்திய மன்னில் பிறந்து உன்னுடைய எஜமானர்கள் முசுலீம் மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்த்த சமுத்தர சிங்கம் கனோஜ் ஆங்க்ரே பெயருடன் அவரின் சித்தாந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டுடன் அடிமையாக வாழும் நீ எதற்க்காக கனோஜ் ஆங்க்ரே பெயருடன் கருத்து விஷத்தை கக்குகிறாய்?


நாஞ்சில் நாடோடி
ஜூன் 07, 2025 13:36

சபாஷ் கருப்பண்ணசாமி


மு செந்தமிழன்
ஜூன் 07, 2025 07:46

உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு நாடு இல்லையென்றாலோ அல்லது அந்நாடு பொருளாதாரம் மற்றும் போர் பலம்மிகக நாடாக இல்லை என்றால் உங்கள் நிலையும் இது தான். எனவே நம் தாய் நாட்டை விரும்புவோம் அதன் சட்ட திட்டங்களை மதிப்போம். ஜெய்ஹிந்த்


D.Rajan
ஜூன் 07, 2025 07:11

ஹமாஸ் என்ற ஓர் அமைப்பின் மூர்க்கமான செயல்பாட்டால் லட்சக்கனக்கான பாலஸ்தீனியர்கள் பட்டினி... அவர்கள் ஹமாஸை தூக்கி எறியும் வரை இஸ்ரேல் திருப்பி தாக்கவே செய்யும்.


புதிய வீடியோ