வாசகர்கள் கருத்துகள் ( 2 )
50 பேர் ஷாப்பிங் மாலில் தீயினால் உயிரிழப்பு என்றால் அவ்வளவு மோசமான Safety சிஸ்டம் உள்ள மாலா அது
மிகவும் சோகமாக உள்ளது.
பாக்தாத்: ஈராக்கில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில், ஷாப்பிங் மால் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த 5 மாடி அடுக்குமாடிகளை கொண்டது. இந்த மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4azu0uv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 மாடி ஷாப்பிங் மாலில், ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழு அறிக்கை தரப்படும் என அந்நாட்டு கவர்னர் கூறியதாக செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவத்துள்ளது. ஷாப்பிங் மால் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
50 பேர் ஷாப்பிங் மாலில் தீயினால் உயிரிழப்பு என்றால் அவ்வளவு மோசமான Safety சிஸ்டம் உள்ள மாலா அது
மிகவும் சோகமாக உள்ளது.