உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா விசா ரத்து: 50 சதவீத இந்திய மாணவர்கள் பாதிப்பு

அமெரிக்கா விசா ரத்து: 50 சதவீத இந்திய மாணவர்கள் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் விசா ரத்து செய்யப்பட்ட சர்வதேச மாணவர்களில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என தெரியவந்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுங்க மற்றும் குடியேற்றத்துறை, வெளிநாட்டு மாணவர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதற்காக அவர்களின் கடந்த நான்கு மாத கால செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பல குளறுபடிகள் ஏற்பட்டன. போராட்டத்தில் பங்கேற்காத, குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத மாணவர்களும் பாதிக்கப்பட்டதாக சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.அந்த வகையில் 327 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. அதில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள். இதனை தொடர்ந்து சீனாவை சேர்ந்த 14 சதவீத மாணவர்கள், தென்கொரியா, வங்கதேசம் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஏப் 19, 2025 18:10

மத்திய அரசின் மீண்டும் ஒரு சாதனை!


S.Martin Manoj
ஏப் 19, 2025 13:31

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை நமது மோடி உருவாக்குகிறார் பின் எதற்கு வெளிநாட்டு படித்து அங்கு வேலைவாய்ப்பு தேட வேண்டும். இது நமது மோடியை அவமானப்படுத்தும் செயல் ஆன்டி இந்தியன்ஸ்.


thehindu
ஏப் 19, 2025 08:59

மோடியின் முகத்திரை கிழிந்துவிட்டது .


Rajinikanth
ஏப் 19, 2025 07:34

50 சதவீத இந்திய மாணவர்கள் பாதிப்பு" என்பது தவறான தலையங்கம். "பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் இந்தியா மாணவர்கள்" என்பது தான் சரி.


rama adhavan
ஏப் 19, 2025 07:14

அங்கு படிப்பவர்களில் வெளி நாட்டு மாணவர்களில் முக்கால் வாசி இந்தியர்கள் தான். போய் ஏன் வேண்டாத சேட்டை செய்கிறார்கள்? அமைதியாக படித்தால் எதிர்காலம் உண்டு. இல்லை என்றால் திரும்ப வேண்டியது தான். போராட்டங்கள் இங்கு தான் கை கொடுக்கும். அங்கல்ல.


Kasimani Baskaran
ஏப் 19, 2025 06:56

படிப்பதைத்தவிர வேறு வேலைகளில் ஈடுபட்டால் சிக்கல் வரத்தான் செய்யும்.. எதற்கும் விசா நிபந்தனைகளை ஒரு முறைக்கு மேல் படித்து புரிந்து கொள்வது நல்லது.


thonipuramVijay
ஏப் 19, 2025 00:39

அமெரிக்காவுக்கு யாரும் படிக்க போவதில்லை ...படிப்பதற்காக என்று சொல்லிவிட்டு வேலைக்கு செல்வதும் ...குழந்தைகளை பேட்டி தள்ளுவதும் ...நடக்கிறது ... இதனால் அல்ல திறமையுள்ளவர்க்கு கிடைக்கவேண்டிய விசா கிடைப்பதில்லை ... அமெரிக்கா அவர்கள் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறார்கள் . .தவறில்லை


Balaji
ஏப் 18, 2025 23:43

சிக்கியவர்களில் 50% பேர் இந்தியர்கள்... ஏதோ தவறு நடந்திருக்கவேண்டும் செயற்கைநுண்ணறிவினால்.. பாகிஸ்தானிய பங்களாதேஷியா மாணவர்கள் அனைவருமே சிக்கி இருக்க வேண்டுமே இவர்கள் அளவுகோலில்.


thehindu
ஏப் 18, 2025 22:38

எலன் மாஸ்க் கைகொடுக்கவில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை