உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 6 போலீசார் பலி

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 6 போலீசார் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி செலுத்தச் சென்ற மருத்துவக்குழுவுக்கு பாதுகாப்பு அளித்த 6 போலீசார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பகுதிக்கு மருத்துவக்குழு ஒன்று சென்றது. அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போலீஸ் குழு ஒன்றும் சென்றுள்ளது. இந்நிலையில் போலீசாரை குறிவைத்து மர்மநபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு வெடிப்பில் 6 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு குழுவோ அல்லது தனிநபரோ பொறுப்பு ஏற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜன 09, 2024 00:25

ஐயோ பரிதாபம். பாகிஸ்தான் அழிவு, அவர்கள் சோறுபோட்டு வளர்க்கும் அந்த பயங்கரவாதிகளால்தான்.


Shankar
ஜன 08, 2024 22:58

போலியோ சொட்டு மருந்து கொடுப்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பா? நாட்டின் பாதுகாப்பு நிலைமை அந்த லட்சணத்துல இருக்கு.


பெரிய ராசு
ஜன 08, 2024 21:01

எண்ணிக்கை குறைவாக உள்ளது போல ஐயோ பாவம்


A1Suresh
ஜன 08, 2024 19:59

அமைதி மார்க்கம் - என்ன ஒரு பொருத்தம்


வெகுளி
ஜன 08, 2024 18:04

வெடிகுண்டை விளையாட்டு பொருளாக்கிட்டானுக... இவனுக்களை திருத்த ஆயிரம் எல்லை காந்திகள் வந்தாலும் முடியாது...


அப்புசாமி
ஜன 08, 2024 17:20

அய்யோ பாவம்...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ