உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குளோரின் வாயுவை சுவாசித்த 600 யாத்ரீகர்கள் பாதிப்பு

குளோரின் வாயுவை சுவாசித்த 600 யாத்ரீகர்கள் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கர்பாலா: ஈராக்கில் நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கசிந்த 'குளோரினை' சுவாசித்ததால், 600க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்காசிய நாடான ஈராக்கில் உள்ள நஜாப் மற்றும் கர்பாலா நகரங்களுக்கு, ஷியா பிரிவு முஸ்லிம்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஈராக்கின் தெற்கு மற்றும் மையப் பகுதியில் இந்த இரு நகரங்களும் அமைந்துள்ளன. இந்நிலையில், கர்பாலா - நஜாப் சாலை இடையே உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் திடீரென குளோரின் வாயு கசிந்தது. அப்போது, கர்பாலாவுக்கு புனித யாத்திரை வந்த 600க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு, இந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ