உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்

அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பல கோடி மதிப்புள்ள அமெரிக்க போர் விமானம், செங்கடலில் விழுந்த விபத்தில் விமானி ஒருவர் காயமடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் இயங்கி வரும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களில் ஹாரி ட்ரூமன் போர்க் கப்பலும் ஒன்றாகும். இந்த கப்பல் ஏமனில் ஹவுதி படையினருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஹாரி ட்ரூமன் கப்பலில் இருந்த போர் விமானம் செங்கடலில் விழுந்து விட்டது. போர் விமானத்தை நகர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் கடலில் விழுந்துவிட்டது. எப்/எ18 இ மாடலில் உருவான இந்த போர் விமானத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் 570 கோடி ரூபாய்.போர் விமானம் செங்கடலில் விழுவதற்கு முன்பு, அதில் இருந்த வீரர்கள் வெளியேற துவங்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மீட்பு பணிகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 2021ம் ஆண்டில் ரூ.60 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள போர் விமானம் விபத்தில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி