உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "சாதிக்க வயது முக்கியமில்லை": அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி!

"சாதிக்க வயது முக்கியமில்லை": அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சாதிக்க வயது முக்கியமில்லை என மூதாட்டியை பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹெலன் ஆண்டனுச்சி. இவருக்கு வயது 81. இவர் மிக வயதான ரயில் ஓட்டுனர் என்ற பெயரைப் பெற்று, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 1995ம் ஆண்டு 53 வயதில், ரயில் ஓட்டுநராக பணியை ஹெலன் துவக்கி உள்ளார்.

அற்புதமான பயணம்

இது தொடர்பாக, மூதாட்டி ஹெலன் கூறியிருப்பதாவது: '' நான் தினமும் விரும்புவதைச் செய்கிறேன். ஒவ்வொரு நாளையும் ஒரு அற்புதமான பயணமாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்த எனது சக பணியாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்வதும், தினமும் அவர்களை சந்திப்பதும் புத்துணர்ச்சி அளிக்கிறது''. இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வு பெறும் எண்ணம் இல்லை

82வயது பிறந்த நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் மூதாட்டி, தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து, பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூன் 16, 2024 13:36

சாதனை என்பது வேறு. அமெரிக்காவில் வேலையின்மை மிகவும் அதிகரித்துள்ள இந்நேரத்தில் இளைஞர்களுக்கு வழி விடுவது நல்லது.


Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:26

பணியை துவங்கியதே அவருடைய 53 -வது வயதில். இன்று பல இளைஞர்கள் அந்த வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற நினைக்கின்றனர். ஆனால் அந்த 81 வயதிலும் அவர் ஓய்வு பெற விரும்பவில்லை.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி