உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்

காசா : காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 குழந்தைகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் நீடித்த நிலையில், உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரியில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.ஆறு வார கால போர் நிறுத்தத்தின் போது, இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில், கடந்த 23ம் தேதி காசாவில் கான் யூனிஸ் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், ஹமாதி அல் நஜ்ஜர் என்ற டாக்டரின் 10 குழந்தைகளில் 9 பேர் உயிரிழந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 9 குழந்தைகள் ஒரு வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்களாவர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நஜ்ஜரும், எஞ்சிய ஒரு குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நஜ்ஜரின் மனைவி ஆலாவும் ஒரு டாக்டர். இவர் இஸ்ரேல் - காசா போரில் படுகாயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சங்கர்
மே 28, 2025 09:54

கேட்பதற்கே கொடுமையாக இருக்கிறது. பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை