உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்.,கில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி

பாக்.,கில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானும், பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல் சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறது. இன்று(மார்ச் 04) கைபர் பக்துன்க்வாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் முகாமில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக, பயங்கரவாதிகள் இன்னொரு இடத்தில் காரில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

essemm
மார் 05, 2025 20:18

நீங்க தான தீவிரவாதிகளுக்கு புகலிடம்கொடுத்து,சாப்பாடு போட்டு வளர்த்துவிட்டீங்க. நல்லா அனுபவீங்க.


பிரேம்ஜி
மார் 05, 2025 08:08

இன்று புதன்கிழமை தான்! வெள்ளிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன! இதெல்லாம் நோம்புக் காலத்தில் செய்வது ஆண்டவனுக்கே அடுக்காது!


Kasimani Baskaran
மார் 05, 2025 05:52

தனக்குத்தானே வெடிகுண்டு வைத்துக்கொள்ளும் இவர்களுக்கு என்று அறிவு வருமோ...


ஆனந்த்
மார் 05, 2025 05:18

பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும்


Kannuchamy
மார் 05, 2025 05:17

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப பயங்கரத்தை உருவாக்கிய நாடு அதனால் அழிந்து வருகிறது


புதிய வீடியோ