உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனமழையால் வெள்ளப்பெருக்கு ஸ்பெயினில் 95 பேர் உயிரிழப்பு

கனமழையால் வெள்ளப்பெருக்கு ஸ்பெயினில் 95 பேர் உயிரிழப்பு

மேட்ரிட் :ஸ்பெயின் நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 95 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிர் பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வலேன்சியா மாகாணத்தில் பெய்த கனமழையால் 12க்கும் மேற்பட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பரியோ டிலா டோரோ நகரில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் கார்கள், மரக்கிளைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அடித்துசெல்லப்பட்டன. இது சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நுாற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரிடராக இது கருதப்படுகிறது. வலென்சியாவில் மட்டும் 29 மற்றும் 30ம் தேதிகளில் 92 பேர் பலியாகினர். மேலும் மூவர் அண்டை மாகாணங்களில் பலியாகினர். இதனால் பலி 95 ஆக அதிகரித்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி விவசாய நிலங்களை மூழ்கடித்தன. கார்கள் மற்றும் வீட்டின் கூரைகளில் சிக்கி தவித்த 70க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் வாயிலாக மீட்கப்பட்டனர். மேலும், வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் மற்றும் வீடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என ராணுவத்தினர் தொடர்ந்து தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 110 பேரை மீட்டுள்ளனர். இது தவிர 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதற்கிடையே கடும் வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர் கிடைக்காமலும் ஏராளமானோர் அவதியடைந்துள்ளனர். பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை