உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம்; எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்ற மோடி மகிழ்ச்சி

மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம்; எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்ற மோடி மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்றது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அடிஸ் அபாபா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று காரில் ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c0xj11gy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் பிரதமர் மோடியும், எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலியும் பேச்சு நடத்தினர்.பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், பிரதமர் மோடிக்கு எதியோப்பியான் தி கிரேட் ஹானர் என்ற உயரிய விருது வழங்கி அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி கவுரவித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே ஆவார்.பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிக உயரிய விருதான - எத்தியோப்பியாவின் தி கிரேட் ஹானர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான நாகரிகத்தால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். உங்கள் அனைவருடனும், இந்த மாபெரும் எத்தியோப்பியா நாட்டில் இருப்பது எனக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம். நான் எத்தியோப்பியாவுக்கு வந்தவுடன், இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும், பாசத்தையும் வழங்கினர். பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

140 கோடி இந்தியர்களுக்கு….!

எத்தியோப்பியாவின் கவுரவ விருதைப் பெற்றதில் பெருமை கொள்கிறேன். அதை 140 கோடி இந்திய மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அசோகன்
டிச 17, 2025 14:59

மோடிஜியை மற்ற நாட்டினர் கடவுளே நேரில் வந்தது போல் மகிழ்த்து போற்றி வரவேற்கின்றனர். நம் இந்தியாவின் பொற்காலம் இது. நேதாஜி விவேகானந்தர் மறு பிறவி எங்கள் மோடிஜி


RAMESH KUMAR R V
டிச 17, 2025 12:25

இந்திய வரலாற்றில் தற்போது நடப்பது மோடி தலைமையில் பொற்கால ஆட்சி.


ASIATIC RAMESH
டிச 17, 2025 09:50

எத்தியோப்பியாவில் உணவுப்பஞ்சம் இப்போது சரியாகிவிட்டதா ?


Skywalker
டிச 17, 2025 09:04

Super


Gnana Subramani
டிச 17, 2025 09:01

உயரிய விருது தருவதாக சொன்ன பிறகுதான் கிளம்பினார்


vivek
டிச 17, 2025 09:55

இருநூறு வாங்கி கொண்டு கருத்து போடும் ஞான சூன்யம்


Harindra Prasad R
டிச 17, 2025 11:37

நீ கேவலப்படுத்துவது நாட்டின் PM அல்ல 140 கோடி இந்தியர்களை .... சமூக வலை தளங்கலில் இது போல் பேசுவது நல்லது அல்ல ....


V RAMASWAMY
டிச 17, 2025 08:26

அகில உலகமும் போற்றி மிக உயர்ந்த விருதுகள் அளிக்கும் இந்த மா மனிதரை, நமக்கு ரத்தினமாக கிடைத்த நமது பிரதமரை நம் நாட்டிலுள்ளதுகள் அவர் மதிப்பு அறியாமல் கேவலப்படுத்துகின்றன. எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனை என்கிற வழக்குச்சொல் நினைவுக்கும் வருகிறது.


T.Senthilsigamani
டிச 17, 2025 08:08

மோடிஜி சகாப்த சாதனைகளை யாரும் முறியடிக்க முடியாது


Kesavan Subramanian
டிச 17, 2025 09:48

correct


சாமானியன்
டிச 17, 2025 08:04

இனிமே இந்த ஊர் கடைகள் அந்த ஊரிலும், அந்த ஊர் கடைகள் இந்த ஊரிலும் வந்துடும்.


R.RAMACHANDRAN
டிச 17, 2025 07:08

விருது கொடுத்து விருந்து கொடுத்து அவர்களுக்கு தேவையானதை இந்திய நாட்டிடமிருந்து அடைகின்றனர். இந்திய குடிமகன்கள் மத்திய மணிலா அரசுகளில் உள்ள குற்றவாளிகளின் கொடுங்கோன்மையான ஆட்சிகளால் பாதிக்கப் படுபவர்களை கண்டுகொள்வது இல்லை.


N Sasikumar Yadhav
டிச 17, 2025 09:31

உங்க கருத்து நக்சலைட்டுகளின் கருத்துக்களை போல இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை