உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடவுள் என்னைக் காப்பாற்றியது இதற்குத்தான்; அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் நெகிழ்ச்சி!

கடவுள் என்னைக் காப்பாற்றியது இதற்குத்தான்; அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் நெகிழ்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'கடவுள் இந்த ஒரு காரணத்துக்காகத் தான், கொலை முயற்சி சம்பவங்களில் இருந்து என்னைக் காப்பாற்றியுள்ளார்,' என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார். அவர் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: குடியரசுக் கட்சி வெற்றிக்காக, ஓட்டளித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. இதுவரை யாரும் காணாத வகையில், ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mornkd6s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வீண் போகாது

அமெரிக்கா மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். பிரச்னைகளை தீர்ப்பேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். மக்கள் என்னை நம்பி தான் ஓட்டளித்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது. அமெரிக்கா மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். எண்ணில் அடங்காத தடைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளேன். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்.

மஸ்குக்கு நன்றி

வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. நாட்டை சீரமைத்து மீண்டும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம். அதிபர் தேர்தல் மட்டுமல்ல செனட் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு முக்கியமான நபர் எலான் மஸ்க்; எனக்கு ஆதரவளித்த X தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்குக்கு நன்றி.900க்கும் மேற்பட்ட பிரசாரங்கள் மேற்கொண்டு, அந்த பிரசாரங்களின் பலனாக வெற்றி சாத்தியமாகி உள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை அமெரிக்க மக்களுக்கு உறுதி செய்யப் போகிறோம். உலகிலே மிக முக்கியமான பொறுப்பு அமெரிக்க அதிபர் பொறுப்பு. அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். மக்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.

உழைப்பு

துணை அதிபராக தேர்வாகும் ஜே.டி.வான்ஸ்க்கு வாழ்த்துகள். கடும் உழைப்பாளிகளான அமெரிக்கர்களுக்கு நன்றி, உங்கள் அன்பிற்கு காணிக்கையாக எங்கள் உழைப்பை தருவோம். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். சீனா உள்ளிட்ட பிற நாடுகளிடம் நம்மிடம் உள்ள அளவிற்கு எண்ணெய் வளங்களோ, பிற வளங்களோ இல்லை. கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார் என்று பலர் என்னிடம் கூறினர். நம் நாட்டைக் காப்பாற்றவும், அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றவும் தான் கடவுள் என்னைக் காப்பாற்றினார். நாம் அந்த கடமையை நிறைவேற்றியே தீருவோம். இவ்வாறு டிரம்ப் பேசினார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷாவின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார். உஷாவின் தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், 'அமெரிக்கர்கள் கனவுகள் ஒவ்வொன்றும் மெய்ப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

spr
நவ 07, 2024 01:07

உலகெங்கிலும் இதனால் ஒரு விஷயம் உறுதியாகிறது "மக்களின் மனவோட்டத்தைக் கணிப்புக்கள் மூலம் எடை போடக் கூடாது" என்பதுதான். வென்றவர் பல குற்றச் சாட்டுக்களில் தொடர்புடையவராகக் கூறப்பட்டாலும், திமுக அமைச்சர்கள் போல ஏதோ ஒரு வகையில் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் பாராட்டுவோம் அந்த நாட்டு மக்களை நல்லவழி நடத்துவாரென்று நம்புவோம்


Ramesh Sargam
நவ 06, 2024 20:49

டிரம்புக்கு வாழ்த்துக்கள். நீங்கள் முதலில் செய்யவேண்டிய வேலை உங்கள் நாட்டில் தினம் தினம் நடக்கும் துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமுடிவு காணவேண்டும், மக்களின் உயிரை காப்பாற்றவேண்டும். மற்றவை எல்லாம் பிறகு. நன்றி.


வைகுண்டேஸ்வரன்
நவ 06, 2024 20:03

தி. ம. வாசகர்கள் தவிர வேறு யாரும் எனக்குத் தெரிந்தவரை, அமெரிக்க தேர்தல் பற்றி இவ்வளவு அலப்பறை பண்ணி சீன் போடக் காணும். அதுவும் திமுக, திராவிடம் என்று அமெரிக்கா வுக்கு ஸ்னானப் பிராப்தி கூட இல்லாத விஷயங்களை சம்பந்தப் படுத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். If someone says something in public, it shall serve some purpose. Here, this neither s any link nor any meaning. May be such writings give cheap pleasure to the writers. That too, those who might have not visited US at all. Due to the victory of Trump, would the Apple phone price or powerful price come down?? Think. Silly fellows.


sankaranarayanan
நவ 06, 2024 17:21

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷாவின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார். உஷாவின் தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர். இதேபோன்று முன்பு கமலா ஹாரிஸும் சென்னையை சேர்ந்தவர் என்ற பெருமை எல்லா இந்தியர்களுக்கும் உண்டு உலகில் வாழ்க இந்தியர்கள் எங்கிருந்தாலும் வளர்க்க இந்திய பண்பாடு


M S RAGHUNATHAN
நவ 06, 2024 16:47

என்ன பார்ப்பனீய சிந்தனை. கடவுளுக்கு நன்றி சொல்கிறார். திராவிட குஞ்சுகளுக்கு ஒரே எரிச்சல். பர்னல், ஜெலுசில் தமிழ் நாட்டில் அமோக விற்பனையாம். எங்கள் ஊர் நாயக்கர் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று சொன்னார். நம் தமிழ் திராவிட ஸ்டாக் நாயக்கர் சொன்னது ஹிண்டுக் கடவுளர்களை த்தான், கிருத்துவ கடவுளை அல்ல என்று கம்பி கட்டுவாங்க பாருங்க.


sankaran
நவ 06, 2024 15:38

நல்ல வேளை ...அமெரிக்கா தப்பித்தது கமலா ஹாரிஸ் இடம் இருந்து ... அமெரிக்கர்கள் மிக சரியாக இந்த முறை ஒட்டு அளித்துள்ளார்கள் ...


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 06, 2024 14:29

தாய்லாந்து குட்டி நீர் யாணை கணிப்பு மிகச் சரியான கணிப்பு. குட்டி நீர் யாணைக்கு வாழ்த்துக்கள். இதேபோல் வருகின்ற தமிழக தேர்தலில் கணித்து கூறினால் நன்றாக இருக்கும்


SUBBU,MADURAI
நவ 06, 2024 14:50

நான் உட்பட பலரும் மறந்து விட்ட அந்த நீர் யானை கணித்ததை நினைவில் வைத்திருக்கிறீகள்!தங்களின் ஞாபக சக்திக்கு பாராட்டுக்கள்.


சமீபத்திய செய்தி