உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2ம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு ஜப்பானில் வெடித்தது

2ம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு ஜப்பானில் வெடித்தது

டோக்கியோ: ஜப்பானில், மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்ததில், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது.கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. 1943ல், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் கடற்படை தளமாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.அமெரிக்க ராணுவம் வீசிய வெடிக்காத குண்டுகள், மியாசாகி விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்ததில், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது.இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், '500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதனால், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது. 'வெடிகுண்டு வெடித்த போது அருகில் எந்த விமானங்களும் இல்லை. மேலும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. 'இந்த சம்பவத்தால், 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
அக் 03, 2024 15:32

அருமை, இதைவிட மிகப்பெரிய வெடிகுண்டுகளை உலகம் சந்தித்து வருவதால், எல்லாமே ஒரு செய்தியாகோப்போனது, அவரவர்களுக்கு வந்தால் மட்டுமே தெரியும் தலைவலியும் திருகு வலியும் என்பார்கள் அதுபோல் வருங்கால சந்ததியினர்களுக்கு நம்மக்கள் இவைகளையெல்லாம் வைத்துவிட்டுப் போகப்போகிறார்களோ தெரியவில்லையே, ஹிரண்யாய நமஹ


Kasimani Baskaran
அக் 03, 2024 05:22

சிங்கப்பூரில் இன்னும் பல இடங்களில் கட்டிடங்களுக்கு வானம் தோண்டும் பொழுது பல இடங்களில் இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்க்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கட்டிடம் கட்ட அனுமதி வாங்கும் பொழுது எழுத்து பூர்வமாக நிபுணர்கள் அறிவுறுத்துவார்கள். இன்னும் பல இடங்களில் ஆபத்து உண்டாக்கப்பட வாய்ப்புள்ள வெடிக்காத குண்டுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.


முக்கிய வீடியோ