உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கார் பந்தய சீசனில் நடிக்கப் போவதில்லை: நடிகர் அஜித்குமார்

கார் பந்தய சீசனில் நடிக்கப் போவதில்லை: நடிகர் அஜித்குமார்

துபாய்: '' 18 வயது முதல் பைக் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறேன். பைக் ரேஸ் முடியும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை,'' என நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் நடைபெறும், '24 எச் மற்றும் ஐரோப்பிய 24 எச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ்' போட்டிகளில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கிறார். போட்டிக்கு முன் நடந்த கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர் ஓட்டிய ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி, அருகே இருந்த தடுப்புகள் மீது மோதி சுற்றி சுழன்று நின்றது. இதில், காரின் முன்பக்கம் முற்றிலும் சேதமானது. எனினும், அந்த காரில் இருந்த அஜித் காயம் ஏதுமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.இந்நிலையில், அஜித்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: 18 வயது முதல் பைக் ரேசில் ஈடுபட்டு வருகிறேன். சினிமாவில் பணியாற்றியதால் சில காலம் பங்கேற்க முடியவில்லை. 2002ம் ஆண்டு 32 வயதாகும் போது மீண்டும் மோட்டார் ரேஸிங்கில் ஈடுபட்டேன். கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டேன். இந்தியாவில் நடந்த ரேஸிங்கில் பங்கேற்றேன்.2003ல் பார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதுடன் அந்த ஆண்டு முழுதும் நடந்த தொடர்களில் பங்கேற்றேன். 2004 ல் பிரிட்டிஷ் பார்முலா 3 ரேஸிங்கில் 'ஸ்காலர்ஷிப்' பிரிவில் பங்கேற்றாலும், துரதிருஷ்டவசமாக பணிச்சூழல் காரணமாக அதனை முழுமையாக முடிக்க முடியவில்லை.இதனால் சில காலம் காத்திருந்தேன். 2010 ல் ஐரோப்பிய பார்முலா 2 சீசனில் பங்கேற்றாலும், சினிமா காரணமாக சில ரேஸில் மட்டும் பங்கேற்க முடிந்தது.தற்போது மீண்டும் இத்துறையில் ஈடுபட விரும்புகிறேன். ஒரு வீரராக மட்டுமின்றி அணியின் உரிமையாளராக சாதிக்க விரும்புகிறேன். கார் பந்தய சீசன் ஆரம்பிக்கும் வரை, நான் எந்த படங்களிலும் புதிதாக ஒப்பந்தம் செய்ய மாட்டேன். அக்., முதல் மார்ச் வரை, நான் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். யாரும் கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அஜித் குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜன 11, 2025 09:01

அஜித்தே கடவுளே... கை வுடறியே


Azar Mufeen
ஜன 11, 2025 00:04

அஜித் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதனுக்கு ரசிகனாய் இருப்பதில் எனக்கு பெருமையே உங்கள் முயற்சிக்கு வணக்கங்கள்


subramanian
ஜன 10, 2025 22:00

அஜித் தின் நீண்ட நாளைய ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆல் தி பெஸ்ட் அஜித்


Karthik
ஜன 10, 2025 19:55

மன வலிமை யுடன் நீங்கள் தொடரும் இந்த விடாமுயற்சி யால் விரைவில் வெற்றி கிரீடம் சூட்டிய ராஜா வாக வருவீர் தமிழகம். பின் நாளில் அதுவே உங்கள் முகவரி.. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் AK..


bmk1040
ஜன 10, 2025 19:11

அது சரி ஜனங்க படத்தை பார்க்கணுமே. அஜித் சார் வழக்கமான பார்முலா படமா இல்லாம கொஞ்சம் கிரிஸ்பி மாடர்னா அதே சமயம் கதையோட இருந்தா பார்ப்பாங்க...


முக்கிய வீடியோ