உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் இந்தியர்களுக்கு அறிவுரை

ஈரானில் இந்தியர்களுக்கு அறிவுரை

மேற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:மேற்காசிய பிராந்தியத்தின் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். ஈரானுக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும். டெஹ்ரானில் உள்ள நம் துாதரகத்துடன் அவர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை

காசாவில் 51 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை, நேற்று அதிகாலை இஸ்ரேல் படைகள் நடத்தின. இதில், 12 குழந்தைகள், ஏழு பெண்கள் உட்பட, 51 பேர் உயிரிழந்தனர். மேலும், 82 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ