உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 580 நாட்களுக்குப் பிறகு... இஸ்ரேல் ராணுவ வீரரை விடுவிக்கும் ஹமாஸ்

580 நாட்களுக்குப் பிறகு... இஸ்ரேல் ராணுவ வீரரை விடுவிக்கும் ஹமாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வந்தது. இஸ்ரேலுக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், நூற்றுக்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் காசா மீதான படையெடுப்பை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர்.அமெரிக்க அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த ஜன.,19ம் தேதி இரு தரப்பினரிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் ஒரு பகுதியாக, இருதரப்பிலும் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படிப்படியாக பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அந்த வகையில், ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரும், அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவருமான ஈடன் அலெக்ஸாண்டர், 21, என்பவரை 580 நாட்களுக்குப் பிறகு விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா,கத்தார், எகிப்து மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்ற 4 முனை பேச்சுவார்த்தைக்கு பிறகு அலெக்ஸாண்டரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக அவர் நாளை மீண்டும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்படலாம்.மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து வாஷிங்டன் சிறப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இது ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும். மேலும் ஹமாஸ் வசம் உள்ள 4 அமெரிக்கர்களின் உடல்களை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்,' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Madras Madra
மே 12, 2025 15:28

ஹமாஸ் போன்ற கோழைகள் உலகம் முழுவதும் தனிமை படுத்த பட வேண்டும் அமைதிக்கு எதிராக சிந்திக்கும் கும்பல்கள் மொத்தமாக அடையாளம் காணப்பட்டு கண்டவுடன் சுட எல்லா உலக நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் பஹல்கம் தாக்குதல் எவ்வளவு கோழைத்தனமானது ஆயுதம் இன்றி இருப்பவர்களை , மத அடையாளம் கேட்டு கொல்லுவது எவ்வளவு கோழைத்தனம் இது என்ன கேடு கேட்ட கொள்கை இந்த தாக்குதல் ஹமாஸ் சின் ஐடியா என்று சொல்லப்படுகிறது


Mypron
மே 12, 2025 13:50

ஒரு அணுகுண்டு போதும், அவர்கள் அறிவு உலகத்துக்கு முக்கியம்


ms muralidaran
மே 12, 2025 12:55

இளம் வயதில் எதிரிகளிடம் சிக்கியது கொடுமையானது உலகம் வாழவே தகுதி அற்றதாக உள்ளது தீவிரவாதம் இல்லா உலகம் வேண்டும் ஓஷோவும் வேதாத்திரி மகரிஷியும் சொல்வது போல் அணைத்து நாடுகளின் எல்லையை ஐ நா சபை பார்த்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு நாடும் ஒரு மாநில அரசு போல் செயல் பட வேண்டும்


hasan kuthoos
மே 12, 2025 12:52

ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேல் தீவிரவாதிகள் தனியாக நேருக்கு நேர் நின்று போரிட்டால் அப்போது தெரியும் யார் வெற்றி பெறுவார்கள் என்று , அமெரிக்கா உதவியுடன் அப்பாவி நிராயுதபாணி மக்களின் மீது வான் தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டு வெற்றி களிப்பில் ஆடுவது தான் வீரமா


visu
மே 12, 2025 14:54

காசா போரில் பலஸ்தீன தீவிரவாதிகளை இஸ்ரேலிய ராணுவம் அடித்து நொறுக்குகிறது .அங்கே ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலிய ராணுவம் உள்ளே வந்தால் சீருடையை கழற்றி எரிந்து விட்டு ஓடி பெண்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள் அப்புறம் இது வீரமா என்று சவடால் வேறு வேண்டுமானால் ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கள் இருப்பிடத்தை சொன்னால் IDF குறிபார்த்து குண்டு வீசி பலத்தை நிரூபிக்கும்


தமிழ்வேள்
மே 12, 2025 15:24

ஹசன் பாய் , இன்னும் ஒட்டகத்தில் ஏறி கத்தி சண்டை போடும் காலகட்டத்திலேயே இருக்கிறீர்களே ? இது இருபத்தோராம் நூற்றாண்டு


Ramamoorthy M
மே 12, 2025 20:23

The so-called 'போராளிகள்' keep Machine guns in their hands and kills the common public. If Israel attacks them back brutally, you cry loudly like this? Come on bro! What are your thoughts on this pahalgam attack Mr?


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 12:48

இந்தியாவுல சிறுபான்மையா இருக்குறவரைக்கும் பாசமழை பொழிவாங்க .... 40% ஆனா தெரியும் ..... காஷ்மீர் ஃபைல்ஸ் பார்த்தா உண்மை தெரியும் ....


Kasimani Baskaran
மே 12, 2025 10:32

தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்காமல் விட்டு வைத்தால் இது போல கெஞ்சிக்கொண்டுதான் வாழவேண்டும். ஒவ்வொரு வீரனின் உயிருக்கும் இஸ்ரேல் எப்படி போராடுகிறது என்று கவனிக்க வேண்டும்.


மூர்க்கன்
மே 12, 2025 11:29

அது அவுங்க தலை எழுத்து காசி? ஆயுத எழுத்தை மட்டுமே நம்பினால் தலையெழுத்து இப்படித்தான் இருக்கும்.


முக்கிய வீடியோ