உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டன் ஓட்டல் அறையில் ஏர் இந்தியா ஊழியருக்கு நேர்ந்த துயரம்: நைஜீரியரை கைது செய்து விசாரிக்கும் போலீஸ்

லண்டன் ஓட்டல் அறையில் ஏர் இந்தியா ஊழியருக்கு நேர்ந்த துயரம்: நைஜீரியரை கைது செய்து விசாரிக்கும் போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: லண்டனில் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஏர் இந்தியாவில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் (அவர் குறித்த விபரம் வெளியிடப்படவில்லை) லண்டனின் ஹூத்ரூ பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கு நேற்று இரவு அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து நைஜீரியாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மிகப்பெரிய நிறுவனம் ஒன்று நடத்தும் ஓட்டல் ஒன்றில் நடந்த சட்டவிரோத சம்பவத்தில் எங்களது ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார். எங்களது ஊழியருக்கு அனைத்து உதவிகளை வழங்குவதுடன், ஆலோசனையும் கொடுத்து வருகிறோம். அவரின் தனிப்பட்ட உரிமைக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ஏர் இந்தியா தெரிவித்து உள்ளது.இதனிடையே, அந்த பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 18, 2024 20:42

Nigerians are worst and dangerous creatures.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 18, 2024 20:41

பிபிசி எங்கே அவர்களின் கண்கள் குருடாகிவிட்டதா? இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடந்தால் கேமராவை, மைக்கை தூக்கிக்கொண்டு வரும் இவர்கள், பிரிட்டனில் என்ன நடந்தாலும் காட்டமாட்டார்கள்.


Amruta Putran
ஆக 18, 2024 17:37

Marma Manish an of Nigeria?


D.Ambujavalli
ஆக 18, 2024 16:23

அதுதான் 'அநியாயம் நடந்துள்ளது' என்று நாசூக்காக கூறிவிட்டார்களே இன்னும் பட்டவர்த்தனமாகக் கூறி அந்தப் பெண்மணியை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டுமா ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை