உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லடாக்கில் 4 இடங்களில் படைகளை விலக்கியதாக சீனா அறிவிப்பு

லடாக்கில் 4 இடங்களில் படைகளை விலக்கியதாக சீனா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: கிழக்கு லடாக்கின் கல்வான் உட்பட நான்கு இடங்களில் இருந்து படைகளை விலக்கி உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஜூனில் மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பு உறவும் பாதிக்கப்பட்டது. லடாக்கின் பல பகுதிகளில் ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டு, இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சு வாயிலாக மோதலை முடிவுக்கு கொண்டு வருவது என தீர்மானிக்கப்பட்டது. இதுவரை 21 கட்ட பேச்சு நடந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rr2u608a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ரஷ்யாவில் பிரிக்ஸ் நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு இடையே நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்து பேசினர். அதில், கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இரு நாட்டு படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வது, இரு நாட்டு உறவுகளை புதுப்பிக்க உதவும் என வலியுறுத்தப்பட்டது.இந்த பேச்சு குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இருவரும், இந்தியா - சீனா எல்லை பேச்சுவார்த்தை குழுவின் சிறப்பு பிரதிநிதிகள். இரு நாட்டின் தலைவர்களும் பரஸ்பர புரிதல், தொடர் பேச்சு, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நிலைமையை உருவாக்குவது ஆகிய கருத்துக்களை கொண்டுள்ளனர். அதை செயல்படுத்துவது என இரு தரப்பு பேச்சில் ஒப்புக்கொள்ளப்பட்டது.கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு உட்பட நான்கு இடங்களில் இருநாட்டு படைகள் ஏற்கனவே விலக்கப்பட்டுள்ளன. சீனா - -இந்தியா உறவின் நிலைத்தன்மை, இரு நாட்டு மக்களின் நீண்ட கால நலன்களுக்கும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் அவசியம். இரண்டும் வளர்ந்து வரும் நாடுகள். எனவே, மோதலுக்கு பதில் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை தேர்வு செய்ய வேண்டும் என வாங் யீ வலியுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
செப் 14, 2024 09:41

சீன இறக்குமதியை அதிகமாக்கியதின் பலன். இப்பிடியே அதிகரிச்சுக்கிட்டே போனச்ல் மொத்த படையும் வாபசாயிடும். நாம மெடல்.குத்திக்கலாம்.


venkatan
செப் 14, 2024 09:38

புல் முளைக்காத மண்ணாக இருந்தாலும் அது இந்திய மண்ணே ...அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.ஜெய் ஹிந்த்.


Barakat Ali
செப் 14, 2024 09:31

சீனாவை நம்பி நாம் முழுவதும் படை விலக்குதல் செய்யக்கூடாது ...... ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்றால் நாம் சற்று பின்வாங்கலாமே தவிர முற்றாக விலக்கிக்கொள்ளுவது ஆபத்து ......


தத்வமசி
செப் 14, 2024 09:14

இல்லையென்றால் யாராவது அவரிடம் சொல்லுங்களேன். அறுபது ஆண்டுகள் ஆண்ட கட்சியால் செய்ய இயலாததை மோடி செய்துள்ளார் என்று யாராவது சொல்லுங்கள்.


தத்வமசி
செப் 14, 2024 08:41

இப்போது மணிப்பூரில் நடக்கும் கலவரங்களுக்கு யார் உதவுகிறார்கள் ? கட்டாயம் பாகிஸ்தானும், பர்மாவும் கிடையாது. ட்ரோன் தாக்குதல் யார் துணையுடன் நடக்கிறது ?


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2024 07:55

சமீபத்தில் ஜெய்ஷ்ங்கர் மீதான காழ்ப்புணர்வை சீனா வெளிப்படுத்திய விதம் கேள்விக்குரியது


Kasimani Baskaran
செப் 14, 2024 06:24

முதுகில் குத்தும் பழக்கமுள்ள சீனாவை எப்பொழுதும் நம்ப முடியாது. 200% கவனமாக இருப்பது இந்தியாவுக்கு நல்லது.


Palanisamy Sekar
செப் 14, 2024 06:21

காங்கிரஸ் ஆட்சியில் செய்த இமாலய தவற்றில் பாஜக ஒவ்வொன்றாக சீர்திருத்தி வருகின்றது. நமது ராணுவ பலத்தின் காரணமாகவே இந்த படை வாபஸ் நடந்துள்ளது. அதிலும் ஜெயசங்கர், அஜய் தோவல் போன்ற மோடியின் தளபதிகளின் அணுகுமுறையை வைத்தே சீனா தனது படைகளை திரும்ப பெற்றுள்ளது. இந்த செய்தியை காங்கிரசின் பப்பு ரசிக்க முடியாமல் தவிப்பார். மோடியின் ராஜதந்திரம் போர் இன்றி இனிதே நடந்துவிட்டது. அதற்குள் எவ்வளவு வசவுகள் இந்த திராவிடியா மாடல் அரசுகூட செய்தது அதனை. லடாக் எங்கே இருக்கின்றது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சகட்டுமேனிக்கு மோடியை விமர்சித்த தத்திகளுக்கு இந்த செய்தி பேரிடி எனப்தில் சந்தேகமே கிடையாது


S. Gopalakrishnan
செப் 14, 2024 13:54

அருமையான பதிவு !


தமிழ்வேள்
செப் 14, 2024 16:20

லடாக் , கோல்மால் புற டாஸ்மாக்கின் பின்புறம் உள்ளது - உபீஸின் இன்றைய கண்டுபிடிப்பு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை