உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரேயொரு விளம்பரத்தால் வந்த கோபம்: கனடா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு

ஒரேயொரு விளம்பரத்தால் வந்த கோபம்: கனடா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கனடா மீது அமெரிக்க விதித்துள்ள வரிகளின் எதிரொலியாக இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந் நிலையில் வரி விதிப்பு தொடர்பாக கனடா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qlszilz6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், வரிவிதிப்புகள் வர்த்தகப்போர்களை உருவாக்கலாம் என்று பேசியதாக காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அமெரிக்க அதிபர் டிரம்பை கோபப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.இந்நிலையில் கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சு வார்த்தைகளையும் நிறுத்தி விட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறி உள்ளதாவது;கனடா ஒரு மோசடியான விளம்பரத்தை பயன்படுத்தி இருப்பதாக ரொனால்டு ரீகன் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இந்த வீடியோ போலியானது. அதில் வரிகள் பற்றி ரீகன் எதிர்மறையாக பேசுகிறார். அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றிற்கு வரிகள் மிகவும் முக்கியம். கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் இதன் மூலம் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
அக் 24, 2025 22:52

ஒரு விளம்பரத்தால், வர்த்தக பேச்சுவார்த்தையை ரத்து செய்யும் அளவிற்கு ட்ரம்ப் ஒரு கோமாளி அல்ல. கனடாவுடன் வர்த்தகத்தை துண்டித்தால், அவர்கள் வேறு வழியின்றி அமெரிக்காவுடன் இணைய தயாராகிவிடுவார்கள் என்ற நோக்கத்தில் ரத்து செய்ய ஏதாவது ஒரு சாக்குபோக்கு தேடிக்கொண்டிருந்தார். மாட்டினிச்சு ஒரு விளம்பரம்.


சாமானியன்
அக் 24, 2025 21:45

கூட்டைக் கலைக்கும் வேடன் போல் டிரம்ப் செயல்படுகிறார்.


மனிதன்
அக் 24, 2025 20:24

இந்தாளு உண்மையாகவே ஒரு லூஸுதானோ???


Anand
அக் 24, 2025 17:39

ட்ரம்ப் தன்னை எதிர்ப்பவர்களிடம் பம்முவார், கூழைக்கும்பிடு போடுபவர்களை ஏறி மிதிப்பார். மொத்தத்தில் இருபத்தி ஐந்தாம் புலிகேசி.... இருபத்தி நாலாம் இடத்தை ஏற்கனவே இங்குள்ள ஒரு தத்தி பிடித்துவிட்டார்.


தத்வமசி
அக் 24, 2025 18:32

டிரம்ப் மட்டுமில்லை அனைத்து அரசியல்வாதிகளும் அப்படித்தான். ஓட்டுக்காக காலில் விழுகிறார்கள். ஜாதி ஓட்டுக்காக எப்படி அலைகிறார்கள் ? கூட்டாக யாராவது போராட்டம் நடத்தினால் அவர்களை தாஜா செய்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கேட்டதை அள்ளி கொடுக்கிறார்கள். ஆனால் பாமாரனுக்கு பெப்பேப்பே....


SANKAR
அக் 24, 2025 19:15

his anger is against FAKE video.Reagan trust and NOT Trump d it as FAKE.In Reagan days there was NO trade war.Seefs sown at his time by allowing the start of exploitation of US by other Countries.Only Trump started retaliation after five decades of exploitation of US was allowed by all Presidents preceding him.


duruvasar
அக் 24, 2025 17:16

கனடா அதிபர் போனவாரம் தானையாயா டாடி ஸ் கிரேட்ன்னு சொன்னாரு. உங்களுக்கும் சபாஸ் ஷரிபகும் தானே போட்டியே நடந்தது. என்ன இப்படி செஞ்சிபுட்டாரு இந்த மனுசன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை