உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பன்றியின் சிறுநீரகம் பொருத்திய அமெரிக்கர் காலமானார்

பன்றியின் சிறுநீரகம் பொருத்திய அமெரிக்கர் காலமானார்

உலகில் முதல்முறையாக, மரபணு மாற்றம் செய்த பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட அமெரிக்கர் ரிக் ஸ்லேமன், அறுவை சிகிச்சை நடந்த 2 மாதம் கடந்த நிலையில் உயிரிழந்தார்.மசாசூசெட்ஸ் வெய்மவுத் நகரில் வசித்து வந்தவர் ரிச்சர்ட் ஸ்லேமன்(62) இவருக்கு கடந்த மார்ச் மாதம் அங்குள்ள பொதுமருத்துவமனையில் பன்றியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நான்கு மணி நேரத்தில் முடிந்து பின் ஏப்ரல் மாதம் டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில் அவர் தற்போது உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், அவரது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.மேலும் இது மாற்று அறுவை சிகிச்சையுடன் தொடர்புடையது அல்ல என்பதை மருத்துவமனை உறுதிப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி