உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப்பை கொல்ல முயற்சியா? ஈரான் மறுப்பு

டிரம்ப்பை கொல்ல முயற்சியா? ஈரான் மறுப்பு

டெஹ்ரான்: '' அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், இது ஆதாரமற்றது எனக்கூறியுள்ளது.அமெரிக்கா அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பை பிரசாரத்தின் போது கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது. அதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டிரம்ப்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறியதாவது: கடந்த காலங்களிலும் ஈரான் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவற்றை தொடர்ந்து மறுத்து வந்துள்ளோம். தவறு என நிரூபித்து விட்டோம். மீண்டும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி, அமெரிக்க - ஈரான் இடையிலான உறவை இன்னும் சிக்கல் ஆனதாக மாற்ற ஈரான் விரோத சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இவை அனைத்தும் அடிப்படை ஆதாரம் அற்றவை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ