உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன இணை நிறுவனர் விவேக் தனேஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் விவேக் தனேஜா(41). விர்ஜினியாவில் வசித்து வருகிறார். இவர் டைனமிக் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இந்த நிறுவனம், அமெரிக்க அரசுக்கு தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் தரவுகளை பகுப்பாய்வு செய்து வழங்கி வருகிறது. விவேக் தனேஜா, கடந்த2ம் தேதி வாஷிங்டன்னில் உள்ள ஜப்பானிய உணவகத்தில் சகோதரிகளுடன் உணவருந்தி திரும்பிவிட்டு மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்டார். அதில், பலத்த காயம் அடைந்து, சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் தனேஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இடத்தில் பதிவான சிசிடிவி கேமராக்களை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 25 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாகியும், மர்மமான முறையில் இறந்து வரும் நிலையில், விவேக் தனேஜாவும் தாக்கப்பட்டு உயிரிழந்தது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bye Pass
பிப் 11, 2024 06:07

அமேரிக்காவில் வேலை விட்டு தூக்கினால் சுட்டு கொள்வார்கள் ..அமெரிக்காவில் விலை வாசி அதிகம் ..மனா உளைச்சல் அதிகம்


Rajagopal
பிப் 11, 2024 05:47

காலிஸ்தானிகள்தான் இதை செய்கிறார்கள். அவர்களை பிடிபடாமல் சி ஐ ஏ காப்பாற்ற எல்லா முயற்சிகளும் செய்யும்.


நரேந்திர பாரதி
பிப் 11, 2024 04:28

இந்த தொடர் கொலைகளுக்கும், கனடிய சீக்கிய தீவிரவாத கும்பல்களுக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விடவேண்டும்


Ramesh Sargam
பிப் 10, 2024 23:21

இது ஒரு தொடர்கதை அமெரிக்காவில். இதேபோன்று இந்தியா வாழ் அமெரிக்கர்கள் இந்தியாவில் இப்படி தினம் தினம் செத்துமடிந்தால், அமெரிக்கா சும்மா இருக்குமா?


Ramesh Sargam
பிப் 10, 2024 23:13

இந்தியாவின் வளர்ச்சி, இந்தியர்களின் வளர்ச்சி ஒரு சில அமெரிக்கர்களுக்கு வயிற்று எரிச்சல். ஆகையால் இப்படி இந்தியர்களுக்கு எதிராக நடந்து'கொல்கிறார்கள்'. இந்திய அரசு இதற்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும் கூடிய சீக்கிரம். மேலும் ஒரு உயிரிழப்பு வேண்டாம் ப்ளீஸ். இது அமெரிக்க ஆட்சியாளர்களின் இயலாமையை காட்டுகிறது.


sankaranarayanan
பிப் 10, 2024 21:31

அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாகியும், மர்மமான முறையில் இறந்து வரும் நிலையில், விவேக் தனேஜாவும் தாக்கப்பட்டு உயிரிழந்தது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை மட்டும் ஏற்படுத்தவில்லை அமெரிக்க அரசாங்கத்தின் மெத்தனப்போக்கை முழுவதும் இவைகள் பெரிது பாதிக்கின்றன பின் லேடனை நாடுகடந்து அவனை கொலை செய்த இந்த அமெரிக்க அரசாங்கம் அந்த அடுத்த நாட்டிற்கே தெரியாமல் உள்ளே புகுந்து செய்தது ஆனால் தனது நாட்டிலே இப்படி உழைக்க வந்த இந்தியர்களுக்கு அச்சுறுத்தல்கள் வருவதை இன்னுமா இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை தடுக்க முடியவில்லை இது அவர்களின் மெத்தனப்போக்கைத்தான் வெளிப்படுத்துகின்றது தனக்கு வந்தால் அது இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்ற தத்துவத்தைத்தான் இவர்களும் கடைபிடிக்கிறார்கள் இதற்கு அமெரிக்க அரசே விரைவில் ஓரு முற்றுப்புள்ளி காண வேண்டும்


rama adhavan
பிப் 10, 2024 16:18

அவர் அமெரிக்கர் தான். அன்னாட்டின் குடிமகன்.அங்கேயே இருப்பவர். இதில் வம்சாவளி எங்கு வந்தது? அவருக்கும் நம் நாட்டுக்கும் என்ன தொடர்பு? ஒன்றும் இல்லை.


திரு.திருராம்
பிப் 10, 2024 14:45

இந்திய வெளியுறவுத்துறை அமெரிக்காவுக்கு சம்மன் அனுப்பி, அமெரிக்க அரசை இந்தியாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கும் படி ஆணை அனுப்பவேண்டும்,,,


Milirvan
பிப் 10, 2024 13:16

ஸ்லீப்பர் செல்களை அங்கங்கே தூக்குவதால் பதிலுக்கு முன்னேற்ற பாதையில் செல்லும் ..?


rsudarsan lic
பிப் 10, 2024 12:53

கிறுக்கர்கள் நிறைந்த நாடுகள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ