உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஸ்டார்பக்ஸ் சி.டி.ஓ.,வாக ஆனந்த் வரதராஜன் நியமனம்

ஸ்டார்பக்ஸ் சி.டி.ஓ.,வாக ஆனந்த் வரதராஜன் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலகளவில் பிரபலமான காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை ஐ.ஐ.டி., பட்டதாரியான இவர், அமெரிக்காவின் பர்டூ பல்கலை.,யில் சிவில் இன்ஜினியரிங் துறையில் முதுகலைப் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும் முடித்தவர்.அமேசான் நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவரான ஆனந்த் வரதராஜன், அதற்கு முன் 'ஆரக்கிள்' உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த டெப்ஹால் லெபெவ்ரே, கடந்த செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.இதனையடுத்து, அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் வரதராஜன், வரும் ஜன., 19ம் தேதி பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ