உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் அண்ணாமலை: டெஸ்லா நிறுவனத்துக்கு விசிட்

அமெரிக்காவில் அண்ணாமலை: டெஸ்லா நிறுவனத்துக்கு விசிட்

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகம் சென்று பார்வையிட்டார்.தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை இமயமலைக்கு சென்று இருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2mlgqgpa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசினார். கூட்டத்தில், இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி குறித்து நிபுணர்கள் கலந்து ஆலோசித்தனர். அந்தவகையில், அவர் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகம் சென்று பார்வையிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பரபரப்பு அறிக்கை

இதற்கிடையே, நேற்றிரவு செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவி பறிப்பு குறித்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது. வேறு வழியின்றி, தி.மு.க., அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டு காலம் தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, வேறு வழியின்றி, இன்று அவரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.ஏற்கனவே பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கையில், நாள்தோறும் நமது தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரீகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடிக்கும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம்தாழ்ந்த செயல்பாடுகளும்தான் அதன் ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பியிருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், திமுக செய்து வரும் அரசியலின் இத்தனை ஆண்டு காலத் தூண்களாக இருக்கின்றன. தி.மு.க.,வின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், தி.மு.க.,வின் அடித்தளமே ஆட்டம் காண்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே இதனை நான் காண்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.அரிஸோனா பல்கலையில் அண்ணாமலைஅமெரிக்காவின் அரிஸோனா மாநில பல்கலையில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.இது குறித்து புகைப்படங்களை வெளியிட்டு அண்ணாமலை கூறி இருப்பதாவது:அரிஸோனா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.இந்தியாவின் வளர்ச்சிக் கதை மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்து மாணவர்களின் நுண்ணறிவுமிக்க கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நிகழ்ச்சி அமைந்தன.எதிர்காலத் தலைவர்களாகவும், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் மாறத் தயாராக இருக்கும் இளைஞர்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Thomas
ஏப் 29, 2025 10:16

ஸ்கிராப் பிஸ்னஸ் கிடைக்குமான்னு பார்க்கத்தான். அது சரி. தலைவர் பதவி அம்பேல். எம்பீ பதவிக்கும் பெப்பே. மணல் கமிஷனும் பூட்ச்சு. வருமானத்துக்கு வழி.?


Rajagopalan Krishnan
ஏப் 29, 2025 16:57

பிஜேபி வளர்ச்சி கண்டு ஆடிப்போயிரிக்கும் உளறுவாயர்கள் அண்ணாமலையை கேவலமாக உண்மைக்கு புரம்பான கருத்துக்களை கூறும் ஹிந்து விரோதிகள் பாரத்மாத கி ஜெய் அண்ணாமலை வாழ்க


துர்வேஷ் சகாதேவன்
ஏப் 28, 2025 23:01

நான் கனடா வில் உள்ளேன் , என்னவோ டெஸ்லா ஆபீஸ் எதிரில் நின்று போட்டோ எடுத்து ஒரு சீன் , நாங்க சிக்னல் காண்தகுரே சிஸ்டம் , அதற்காக பலமுறை சென்று வந்து உள்ளேன் , இப்போ டெஸ்லா மார்க்கெட் பயங்கர டல் , ஷேர் அதல பாதாளத்தில் உள்ளது எனக்கே நிறய நஷடம் தாம் ஷேர் ஆள் , ஒருவேளை இந்த புளுகுணி ஷேர் மார்க்கெட் உயர்த்த ஐடியா கொடுத்தேன் என்று சொன்னாலும் சொல்லும்


அப்பாவி
ஏப் 28, 2025 19:59

பயங்கர வாதத்தைத் தடுப்பதில் கோட்டை விட்டவங்களைப் பத்தி ஒண்ணுமே பேசலையே... ஊழல் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. தத்திகளால் நிரூபிக்கவும முடியாது. மூணே மாசத்தில் தீர்ப்பு சொல்லச் சொல்லுங்க.


அப்பாவி
ஏப் 28, 2025 19:35

இமயமலைக்குப் போய் தியானம் பண்ணிட்டு அப்பிடியே ரகசியமா ஃப்ளைட் புடிச்சு அமெரிக்கா போயிட்டார். அடுத்த தொழில் துறை அமைச்சர் வாழ்க.


வாய்மையே வெல்லும்
ஏப் 28, 2025 20:11

இம்ரான் அடிவருடி .. உங்களோட ஆட்டத்தை முடிவுகட்டவே பாஜக வந்துள்ளது அற்பனே .. அண்ணாமலை உலக மாஸ் எப்பவுமே. இம்ரான் ஆட்களுக்கு வயிறு எரியுது போல .. அதான் உளறிக்கொட்டிட்டு இருக்கு.


V Venkatachalam
ஏப் 28, 2025 20:18

டி ஆர் பி ராஜான்னு ஒரு தொழில் நெறி முந்திரி இருக்காரே.. மறந்து போச்சா? அவுரு ரொம்ப கோச்சிப்பாரா இல்லையா? " அப்பாவி " க்கு குசும்பு ஜாஸ்தி. அப்படியே அவுங்க ஆளுங்களையே போட்டு குடுத்துருவாரு.


amuthan
ஏப் 28, 2025 17:40

அடுத்த முதல்வர் என்பதால் முதலீடுகளை ஈர்க்க சென்று இருப்பார்


TRE
ஏப் 28, 2025 16:41

என்ன சம்பந்தம் இல்லாம சுத்திகிட்டு இருக்கு


vivek
ஏப் 28, 2025 17:50

படிச்சவன் tesla போறான் ...TRE போன்ற அறிவிலி tasmac போலாம்


Ramalingam Shanmugam
ஏப் 28, 2025 16:31

துண்டு சீட்டு போல் வருமா


Just imagine
ஏப் 28, 2025 14:21

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ..... துண்டு சீட்டை பார்த்து படிப்பவருக்கு , அவரே முன்பு ஒருமுறை துண்டு சீட்டை பார்த்து உளறியது தான் "சங்கிலி பருப்பு தாலி அறிப்பு "


MP.K
ஏப் 28, 2025 13:56

ஆம் பிஜேபி ஆளும் மாநில அரசுகள் ஊழல் செய்யாத அரசுகள் என்பதை நம்பிட்டோம்


எம். ஆர்
ஏப் 28, 2025 13:41

கம்பெனிக்கு உள்ளே வந்தது எலன் மஸ்க்க்கு தெரியுமா??


வாய்மையே வெல்லும்
ஏப் 28, 2025 15:24

. போவியா அங்கிட்டு சும்மா லந்து பண்ணிட்டு.