உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி : அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி : அமெரிக்கா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்யா -உக்ரைன் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர்.இப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி. ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் , முயற்சித்தும் பலனில்லை எனவே போர் நீடிக்கிறது.இந்நிலையில் அமெரிக்க வெளியிட்டுள்ள அறிவிப்பில் உக்ரைனுக்கு மேலும் 400 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகள், ராணுவ டாங்கிகள் ஆகியவையாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கட்டத்தேவன்,,திருச்சுழி
மே 12, 2024 12:25

மீண்டும் அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்தால்தான் இந்த ரஷ்யா, உக்ரைன் பிரச்சனை முடிவுக்கு வரும் அங்கு விடிவு பிறக்கும் மேலும் அவர் அதிபராவது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லது.


Gokul Krishnan
மே 12, 2024 10:20

மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் என்ற பழமொழி தான் ஞாபகம் வருது அமெரிக்காவில் பல லட்சம் பேர் வீடு இன்றி தெருவில் வசிக்கின்றனர் அது பற்றி எல்லாம் இவர் யோசிப்பது இல்லை


Kasimani Baskaran
மே 12, 2024 00:48

ஒரு பக்கம் அமெரிக்கா அடுத்த பக்கம் ரஷ்யா இடையில் உக்ரைன்


Senthoora
மே 11, 2024 21:35

யுத்தம் நடக்கும்போது, அதை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய வக்கில்லை, இன்னும் யுத்தம் செய், செத்து மடிங்க என்று சொல்லும் உலகத்திலே அநியாய நாடு அமெரிக்கநாடுதான்


முருகன்
மே 11, 2024 21:03

உக்ரைனை அழிக்காமல் விடாது அமெரிக்கா


ஆரூர் ரங்
மே 11, 2024 20:47

அமெரிக்க நகரங்களிலேயே பல லட்சம் ஏழைகள் சாலையோரங்களில் வசிக்கின்றனர் என்பது நினைவிருக்கட்டும்.


M Ramachandran
மே 11, 2024 20:21

உக்கரையின் நலன்களை கொள்ளையடித்து ஆயுதம் விற்பனை என்ற பெயரில் கடன்கார நாடாக்க முயற்சி மற்றும் ஆம் அடிமையாக்கவும் முயற்சி


மேலும் செய்திகள்