உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றனர்.பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். ''பலியானவர்கள் உடல்கள் குண்டுத் துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டன'' என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.கடந்த காலங்களில் இதே போன்ற சம்பவங்களின் பின்னணியில் பலூச் படையினர் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பிரிவினைவாத குழுக்கள் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூலை 11, 2025 12:42

பாகிஸ்தான் ஒரு நாடு அல்ல, அது ஒரு நரகம்.


தியாகு
ஜூலை 11, 2025 11:46

வெள்ளி கிழமை விடியும் நேரம் வாசலில் கோலம் போட்டேன் - இது இந்தியாவிற்கு. வெள்ளி கிழமை விடியும் நேரம் வாசலில் குண்டு வைத்து நாலு பேரை போட்டுத்தள்ளினேன் - இது பக்கி நாட்டிற்கு.


Shekar
ஜூலை 11, 2025 11:33

இன்று வெள்ளிக்கிழமை


krishna37 swami
ஜூலை 11, 2025 10:53

பாக்கில் இது ஒரு சகஜமான கதை


Padmasridharan
ஜூலை 11, 2025 10:52

அவங்க வணங்குற கடவுளால படைச்ச மத்த மனிதர்கள கொல்லறதுதான் தர்மமா தெரியுது இந்த மாதிரி ஆட்களுக்கு சாமி. புனித புத்தகத்துல எவ்வளவோ நல்லது இருக்கு: படிக்க, புரிஞ்சிக்க, நடந்துக்க. அதயெல்லாம் விட்டுட்டு கொடுமைகள் பண்றதுதான் புனிதம்னு நினைக்கறாங்க பலரும்


sekar ng
ஜூலை 11, 2025 10:43

பயங்கரவாதம்தான்


சமீபத்திய செய்தி