உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கால்பந்து போட்டியால் வந்த கலவரம்: இரு தரப்பு ரசிகர்களின் மோதலில் 100 பேர் பலி

கால்பந்து போட்டியால் வந்த கலவரம்: இரு தரப்பு ரசிகர்களின் மோதலில் 100 பேர் பலி

என்சரிகோர்: கினியா நாட்டில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பு ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதனையடுத்து மற்றொரு தரப்பினரும் மைதானத்திற்குள் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் 2வது பெரிய நகரம் என்சரிகோர். இங்கு நேற்று (டிச.1) உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. இதனை ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் ஒன்றுக்கூடி கண்டுகளித்தனர். போட்டியில் நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு ரசிகர்கள் ஆவேசத்தில் ஆர்பரித்ததுடன், கால்பந்து மைதானத்திற்குள் நுழைந்தனர். இதனைக் கண்ட எதிர் தரப்பு ரசிகர்களும் மைதானத்திற்குள் புகுந்தனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் பலமாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதல் கலவரமாக மாறியது. மைதானத்திற்குள் வெளியேயும், சாலைகளிலும் சண்டையிட்டுக்கொண்ட ரசிகர்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மைதானம் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக டாக்டர் ஒருவர் கூறுகையில், ''மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. பிணவறையும் நிரம்பியுள்ளது. இந்த கலவரத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nandakumar Naidu.
டிச 02, 2024 17:05

இந்த மக்களுக்கு இப்படியொரு போட்டி தேவையா? 100 பேரின் உயிர்கள் தேவையில்லாமல் பறிபோனது. "ஓம் சாந்தி".


venkataraman muthuswamy
டிச 02, 2024 16:43

இங்கிலாந்து ரசிகர்கள் எப்போதும் கலவரத்தில ஈடுபடுவார்கள். பல நாடுகளில் இங்கிலாந்து ரசிகர்களுக்கு தடை விதித்திருக்கிறாரகள்.


Rpalni
டிச 02, 2024 16:27

கால்பந்து ஆட்டத்தில் தான் கலவரம் அதிகம் நடக்கிறது. பெங்களுருவின் ஐ டி ஐ அணிக்கும் கோவாவின் டெம்போ அணிக்கும் இடையே நடந்த போட்டியில் கலவரம் ஏற்பட்டு நகரமே அல்லோலகப்பட்டது, ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. நடந்த வருடம் 1981.


Sathyan
டிச 02, 2024 13:00

விளையாட்டில் தவறு செய்வது மனிதனின் இயல்பு, அதற்காக ஒருவரை ஒருவர் அடித்து கொண்டா சாவது? முட்டாள்தனத்தின் உச்சம் இது.


ராமகிருஷ்ணன்
டிச 02, 2024 12:45

மூர்க்க மார்க்கத்தின் செயல் என்று சொல்லவில்லை. அவர்களால் தான் நிதானம் இழந்து செயல்பட முடியும்


Perumal Pillai
டிச 02, 2024 12:44

ஆப்பிரிக்கா நாட்டு சிறுத்தைகள் .


Ramesh Sargam
டிச 02, 2024 12:19

கலவரத்துக்கு காரணமான அந்த நடுவரை முதலில் நாடுகடத்தவும்.