உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தலிபான்களுக்கு கைது வாரன்ட்: பெண்கள் அமைப்பு வரவேற்பு

தலிபான்களுக்கு கைது வாரன்ட்: பெண்கள் அமைப்பு வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தலிபான் அமைப்பினரின் இந்த மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆப்கானிஸ்தானில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, தலிபான் மூத்த தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடா உட்பட இருவரை கைது செய்ய, சமீபத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த நடவடிக்கைக்கு, நீதி மற்றும் விழிப்புணர்வுக்கான ஆப்கானிஸ்தான் பெண்கள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துஉள்ளது. இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு சிறந்த வரலாற்று முடிவை எடுத்துள்ளது. இதை, ஆப்கானிஸ்தான் பெண்களின் வலிமை மற்றும் விருப்பத்தின் அடையாளமாகக் கருதுகிறோம். 'மேலும் இந்த நடவடிக்கை, நாட்டில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியின் புதிய அத்தியாயத்தை துவங்கும் என நம்புகிறோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கண்ணன்
ஜன 26, 2025 11:15

இதனால் ஆப்கானிய ஆண்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது அவர்கள் யாரும் வெளியடு செல்லப்போவதில்லை அவர்கள் அரசும் நடவடிக்கை எடுக்காது. வீண்


Kasimani Baskaran
ஜன 26, 2025 08:06

தேசப்பற்றும், பலமுமில்லாத இராணுவம் ஒரு நாட்டை மரணக்குழியில் தள்ளிவிட முடியும் என்பதற்கு ஆப்கானிஸ்தான் நல்ல உதாரணம்.


raja
ஜன 26, 2025 04:00

அதானே பார்த்தேன் ... இங்கே எங்கக்கா கணி தான் அறிக்கை உட்டுடாங்களொண்ணு.. வர்ற பிச்சை போயிடிச்சுன்னா..


MUTHU
ஜன 26, 2025 11:46

அங்குள்ள ஆப்கன் பெண்கள் இயக்கம் என்பது இங்குள்ள திக போன்றது. ஒரு தலைவி வீரமணி போல் மற்றும் நான்கைந்து பெண் தொண்டர்கள் மட்டுமே உள்ள பல்லெல்லாம் உதிர்ந்து போன ஒரு சொத்தை இயக்கம். இது நாங்களும் பெண்களை பொது வாழ்வில் அனுமதிக்கின்றோம் என்று மேலை நாடுகளுக்கு காட்ட அரசாங்கமே நடத்தும் ஒரு இயக்கம்.


Bye Pass
ஜன 26, 2025 02:36

ஆபகானிஸ்தானுக்கு மாதந்தோறும் அளிக்கும் உதவி தொகையையும் அமேரிக்கா நிறுத்தியுள்ளது ..