உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 83 குழந்தைகளுக்கு தாயாகும் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்

83 குழந்தைகளுக்கு தாயாகும் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டிரானே: அல்பேனியாவில் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரான டயல்லா, 83, குழந்தைகளுக்கு தாயாக போவதாக பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா கடந்த செப்டம்பரில், உலகிலேயே முதல் முறையாக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்தது. இது உலகில் மனிதர் அல்லாத செயற்கை அமைச்சர் என்ற பெயரை பெற்றது. டயல்லா என்று பெயரிடப்பட்ட இந்த அமைச்சர் பொது கொள்முதல் துறைக்கு நியமிக்கப்பட்டார். வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடு எதுவும் இல்லாமல் இந்த துறை செயல்படும் விதமாக டயல்லா இந்த துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அல்பேனிய பிரதமர் எடி ராமா செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அமைச்சர் டயல்லா, கர்ப்பமாக இருப்பதாகவும் 83 குழந்தைகள் பிறக்கும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து பிரதமர் எடி ராமா கூறியுள்ள தாவது: ஒவ்வொரு சோசலிஸ்ட் கட்சி எம்.பி.,க்களுக்கு உதவும் வகையில் 83 உதவியாளர்கள் அல்லது குழந்தைகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக செயற்கையாக உருவாக்கப்படும் 83 உதவியாளர்கள் பார்லிமென்ட் நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்வர். மேலும் எம்.பி.,க்கள் அவையில் இல்லாத போது அவர்கள் தவறவிட்ட விவாதங்கள் குறித்தும் அவர்கள் வந்ததும் தெரிவிப்பர். தேவைப்பட்டால் எதிர்க்கட்சியினருக்கு அவையில் பதிலும் அளிப்பர். இந்த புதிய முறை அடுத்த ஆண்டு இறுதியில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். அடுத்த முறை நீங்கள் என்னை பார்லிமென்ட்டுக்கு பேச அழைத்தால் அப்போது டயல்லாவிடம் புதிதாக 83 குழந்தைகள் எனப்படும் உதவியாளர்கள் இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMESH KUMAR R V
அக் 27, 2025 14:16

முதலில் தமிழகத்தில் செயல் படுத்தவும்.


தமிழன்
அக் 27, 2025 10:44

உள்ள மனிதர்களுக்கே இங்கு வேலை வாய்ப்பு இல்லை இப்போது இது அவசியமா


VENKATASUBRAMANIAN
அக் 27, 2025 08:00

வளர்ந்த நாடுகளைவிட இவர்கள் டெக்னாலஜி யில் முன்னேறியுள்ளனர். இங்கே யும் இதுபோன்று நடந்தால் ஊழல் குறைய வாய்ப்புள்ளது


jss
அக் 27, 2025 13:47

அப்பறம் திருடபோவது யார் என்ற கேள்வி எழும் சில த்திகள் வோட் சார் போன்று வேறு ஏதாவது சோரி ஒன்றை உருவாக்குவர். ஆனாலும் திராவிட கட்சிகள் திருடுவதற்க்கே முன்னுரிமை அளிக்கும் என்று நம்பலாம்.


சாமானியன்
அக் 27, 2025 07:32

சென்ற யுகத்தில் காந்தாரி 101 பிள்ளைகட்கு தாய். அப்போது இருந்த விஞ்ஞானம் இப்போது தெரியாது.மறுபடியும் மகாபாரத யுத்தம் வராமல் இருந்தால் சந்தோஷம்.


Ramesh Sargam
அக் 27, 2025 06:11

இந்தியாவில் இப்பொழுதுள்ள ஒரு சில கைவிட்டு என்னும் அளவுக்கு உள்ள நேர்மையான அமைச்சர்களை தவிர்த்து, மற்ற அமைச்சர்கள் இப்படி ஏ.ஐ. முறையில் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்கள் உருவாக்கப்பட்டால், நாட்டில் லஞ்சம் குறையும், ஊழல் இருக்காது. நேர்மையான ஆட்சி கிடைக்கும்.


Priyan Vadanad
அக் 27, 2025 07:50

சரியான கருத்து நண்பரே. மத்தியில் முதலில் தொடங்கி வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் ஏ.ஐ. முறையில் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்கள் உருவாக்கப்பட்டால், நாட்டில் லஞ்சம் குறையும், ஊழல் இருக்காது. நேர்மையான ஆட்சி கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை