உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷேக் ஹசீனா சமூக வலைதளத்தில் பேசக்கூடாது; முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் மோடி

ஷேக் ஹசீனா சமூக வலைதளத்தில் பேசக்கூடாது; முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: '' ஷேக் ஹசீனா வங்கதேச மக்கள் மத்தியில் சமூக வலைதளத்தில் பேசக்கூடாது என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டார்,'' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.லண்டனில் உள்ள சாத்தம் இல்லத்தில், முகமது யூனுஸ் பேசியதாவது: பிரதமர் மோடியுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஷேக் ஹசீனாவை இந்தியாவில் வைத்திருப்பது உங்கள் விருப்பம். அவரை கைவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஷேக் ஹசீனா சமூகவலைதளத்தில் பேசுவதை நிறுத்த வலியுறுத்தினேன். இது சமூக வலைதளம். அதை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என பிரதமர் மோடி கூறிவிட்டார்.

நோட்டீஸ்

ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் இந்திய அரசிற்கு கடிதம் எழுதி உள்ளது. சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது. தீர்ப்பாயம் விசாரணை நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அவர் செய்த குற்றங்களுக்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இன்னும் பல குற்றங்கள் விசாரணையில் தெரியவரும். நாங்கள் ஒரு சட்ட நடைமுறையைப் பின்பற்றுகிறோம்.

சட்ட நடவடிக்கை

அது சட்டப்பூர்வமாகவும், மிகவும் முறையாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கோபத்தில் எதையும் செய்யக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். இந்தியாவுடன் சிறந்த உறவை நாங்கள் கட்டியெழுப்ப விரும்புகிறோம். அவர்கள் எங்கள் அண்டை நாடு. அவர்களுடன் எங்களுக்கு எந்த அடிப்படை பிரச்னையும் இருக்க விரும்பவில்லை.

பதட்டம், கோபம்

ஆனால் சில பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் வங்கதேசத்தை மிகவும் பதட்டமாகவும், மிக கோபமாகவும் ஆக்குகிறது. இந்தக் கோபத்தைக் கடக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.நாம் அமைதியாக இருக்க முயற்சித்தாலும், திடீரென்று அவர்கள் ஏதாவது சொல்கிறார்கள், ஏதாவது செய்கிறார்கள், கோபம் மீண்டும் வருகிறது. இவ்வாறு முகமது யூனுஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

SUBRAMANIAN P
ஜூன் 12, 2025 13:27

ஒரு தீபாவளி ராக்கெட் உட்டாலே காணாமே போயிடுவே.. உனக்கு நாங்க ஒரு நாடே உருவாக்கி குடுத்திருக்கோம்.. ஒழுங்கா இரு.. இல்லன்னா அதுவும் ரெண்டா உடைப்போம்.


K V Ramadoss
ஜூன் 12, 2025 11:25

இவன் யாரு மோடியிடம் கண்டிஷன் போட... சூரியனைப் பார்த்து?


Iyer
ஜூன் 12, 2025 11:17

ஷேக் ஹசீனா ஒரு தேசபக்தி மற்றும் திறமையான நிர்வாகி. அவர் வங்காளதேச பொருளாதாரத்தை அழிவிலிருந்து மீட்டெடுத்தார். துரோகி யூசுப்பைப் பயன்படுத்தி வங்காளதேச அரசாங்கத்தை கவிழ்த்தவர்கள் அமெரிக்கர்கள்தான்.


தத்வமசி
ஜூன் 12, 2025 11:05

குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த பொம்மை தலைவருக்கு வாய் அதிகம். தனது நாட்டை சீரழித்த மகான் இவர்.


Anand
ஜூன் 12, 2025 10:35

பாகிஸ்தானில் செயல்படும் மர்ம நபர்களில் சிலரை அப்படியே வங்காளதேசத்திற்கும் திருப்பிவிடவேண்டும்...


திருட்டு திராவிடன்
ஜூன் 12, 2025 10:11

இவனை அடிக்க வேண்டும். நன்றி கெட்டதுகள்.


RAJ
ஜூன் 12, 2025 08:45

வண்மையாக கண்டிக்கிறேன்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 08:42

நாடே திவாலாகி விட்டது .. இந்த லட்சணத்தில் ஷேக் ஹசீனா சமூக வலைதளத்தில் பேசக்கூடாதாம் ...


Kulandai kannan
ஜூன் 12, 2025 08:15

நல்ல வேளை, இந்தியாவில் ஆமார்த்திய சென் போன்ற நோபல்வாதிகள் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பில்லை. இலக்கியம், அமைதி போன்ற நோபல் பரிசுகளுக்குப்பின் பெரும் அஜெண்டாக்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் குக்கி இன தீவிரவாதி எவனுக்காவது அமைதிப் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம், மிஷநரிகளின் கைங்கரியத்தில்.


sekar ng
ஜூன் 12, 2025 07:51

நோபல்பரிசும் ஊழல் வாதிகள் கையில் 50/50


புதிய வீடியோ