உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்: 28 பேர் பலி

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல்: 28 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க்கில் நடந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்த லிசிசான்ஸ்க்கில் உள்ள பேக்கரி ஒன்றில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், 28 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேருக்கு இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உக்ரைன் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. அதேநேரத்தில் உக்ரைன் ராணுவம் இதுவரை எந்த தகவலும் கூறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
பிப் 05, 2024 00:18

ஒன்றும் அறியாத பொதுமக்களை ஏன் இப்படி கொன்று குவிக்கிறீர்கள்? இதுதான் போரின் நெறிமுறையா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை