உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அரசின் சிடிசி நிறுவன ஊழியர்கள் 600 பேர் பணிநீக்கம்

அமெரிக்க அரசின் சிடிசி நிறுவன ஊழியர்கள் 600 பேர் பணிநீக்கம்

வாஷிங்டன்: சிடிசி (CDC) எனப்படும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஊழியர்கள் 600 பேர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசாங்க பணியாளர் கூட்டமைப்பு (AFGE) வெளியிட்ட அறிக்கையின்படி,சி.டி.சி.-யில் 2,000-க்கும் அதிகமான உறுப்பினர்களை ஏஎப்ஜிஇ பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தற்போது, 600 பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இது தொடர்பான அறிவிப்புகள் இந்த வாரம் வழங்கப்பட்டு வருகின்றன. பலர் அதனை இன்னும் பெறவில்லை, என தெரிவித்துள்ளது. சுகாதார நிறுவனங்களை மிகவும் கவனத்துடனும், திறமையாகவும் மாற்றுவதற்காகவே மறுசீரமைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவை துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் பற்றி ஏதும் வெளியிடவில்லை. சி.டி.சி. வளாகத்தில் ஒரு நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, வன்முறைத் தடுப்புத் துறையில் பணிபுரிந்த 100 பேர் உள்பட 600 பேர் மீது பணிநீக்க நடவடிக்கை பாய்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 21, 2025 21:24

பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த 600 நபர்களின் குடும்பம் இனி அவர்கள் வாழ்வாதாரத்துக்கு எங்கே செல்வார்கள்? அவர்கள் வாழ்வாதாரத்துக்கான வழியை அரசே செய்யவேண்டும். இல்லையென்றால் அவர்களும் மற்ற HOMELESS நபர்களுடன் சேர்ந்துகொண்டு வீதிகளில் PLEASE HELP ME என்கிற வாசகம் கொண்ட பதாகைகளுடன் பிச்சை எடுக்கவேண்டியதுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை