உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்: 7 பேர் பலி; 11 பேர் காயம்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்: 7 பேர் பலி; 11 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் வெடித்து சிதறியதில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் லூயிஸ்வில் விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது. இதனால் தீம்பிழம்புகள் உருவாகி பெரும் புகை மண்டலமே உருவானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jk8vu256&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவ இடத்திற்கு விரைந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆயிரம் கிலோ எடை கொண்ட எரிபொருளுடன் விமானம் வெடித்துச் சிதறியதே பெரிய அளவுக்கான தீ விபத்துக்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர் என கவர்னர் ஆண்டி பெஷியர் தெரிவித்து உள்ளார். விபத்தில் சிக்கிய இந்த விமானம், 34 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த விமானம் 2006 முதல் சேவையில் இருந்துள்ளது. இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. விமானம் கீழே விழுந்து நொறுங்கி பற்றி எரியும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rahul
நவ 05, 2025 16:42

ஆழ்ந்த இரங்கல்


duruvasar
நவ 05, 2025 15:35

இந்த செய்திப்படி பார்த்தால் இந்த விமானம் 1991 இல் தயாரிக்கபட்டது அந்நாள் 2006 இல் இருந்துதான் சேவையில் இருந்திருக்கிறது. அப்போ 15 வருத்தம் ஒர்க் ஷாப்பிலிருந்ததா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை