உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிறைய கொலை மிரட்டல்கள் வருகிறது; டிரம்பிடம் எலான் மஸ்க் வருத்தம்

நிறைய கொலை மிரட்டல்கள் வருகிறது; டிரம்பிடம் எலான் மஸ்க் வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அதிபர் டிரம்பின் அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைய கொலை மிரட்டல்கள் வருவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் பேசுகையில் தெரிவித்தார். அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் பங்கேற்றார். கூட்டத்தில், நிறைய கொலை மிரட்டல்கள் வருவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்தார். டிரம்பின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் கோடீஸ்வரரான இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் . கூட்டத்தில் எலான் மஸ்க் பேசியதாவது: பாதுகாப்புத் துறைக்கு நிறைய செலவு செய்கிறோம். வட்டி கட்டுவதற்கு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை செலவிடுகிறோம். இது தொடர்ந்தால், நாடு உண்மையில் திவாலாகிவிடும். இதனால் தான் ஆட் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்கிறேன், மேலும் நிறைய கொலை மிரட்டல்களைப் பெறுகிறேன். அதிபர் டிரம்ப் இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த அமைச்சரவையை ஒன்றாக இணைத்துள்ளார். நான் பொய்யாகப் பாராட்டுவதில்லை. இது ஒரு சிறப்பான மக்கள் குழு. இவ்வளவு திறமையான குழு இதுவரை கூடியதில்லை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.மஸ்க் 'தொழில்நுட்ப ஆதரவு' என்று எழுதப்பட்ட டி-சர்ட்டையும், குடியரசுக் கட்சியினர் பயன்படுத்தும் 'அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்' என்று எழுதப்பட்ட தொப்பியையும் அணிந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Oru Indiyan
பிப் 27, 2025 12:29

இவர் நல்லவரா கெட்டவரா. புரியல


Srinivasan Krishnamoorthy
பிப் 27, 2025 19:58

threat is happening because of his strong actions against corrupt officials, cia, usa aid funding.


RAMAKRISHNAN NATESAN
பிப் 27, 2025 12:26

போற போக்கைப்பார்த்தா டிரம்ப், எலான் மஸ்க் ரெண்டு பெரும் கவுண்டமணி, செந்தில் மாதிரி வலம் வருவாங்க போல .....


சமீபத்திய செய்தி