உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐ.நா.: வங்கதேசத்தில் இன அடிப்படையில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது என ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில் மாணவர்கள் வன்முறை போராட்டத்தால், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அதன் பிறகும், ஹிந்துக்கள் வீடுகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. கடந்த வாரம் 20 ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 40 பேர் லேசான காயமடைந்துள்ளனர். ஹிந்துக்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் சில ஹிந்து கவுன்சிலர்களும் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியே குட்டரசின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ளதாவது,வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனாலும் வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்து சமூகத்தினருக்கு எதிராகவும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் இன வெறி தாக்குதல் நடந்துள்ளது கண்டனத்திற்குரியது. ஹிந்துக்கள் மீது மட்டுமல்ல பல இந்து கோவில்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய இரண்டு இந்துத் தலைவர்கள் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர், வன்முறையை தூண்டுதல், இன அடிப்படையில் தாக்குதல் நடத்துதல், ஆகியவற்றை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.முகமது யூனுஷ் தலைமையிலான புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசுக்கு ஐ.நா.பொதுச்செயலர் வாழ்த்தினாரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இல்லை.. பதவியேற்பு விழாவில் ஐ.நா. அதிகாரி கலந்து கொண்டார் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

SUBBIAH RAMASAMY
ஆக 11, 2024 14:56

இவ்வளவு நாள் காலம் தாழ்தியது ஏன்


Ramarajpd
ஆக 10, 2024 06:42

எந்த நாட்டில் மிகப்பெரிய கலவரம் நடக்கிறதோ அந்த நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் சொத்து சூறையாடப்படுகிறது இது வரலாற்று உண்மை. உதாரணம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இப்போது பங்களாதேஷ். இதேபோல் ஒரு பெரிய கலவரம் இந்தியாவில் நடக்க வேண்டிய அவசியம் இல்லையே ??


சுலைமான்
ஆக 09, 2024 23:33

இந்த மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, இந்திய முஸ்லீம் லீக், தமிழக முஸ்லிம் லீக், தமுமுக, இவனுங்களுக்கெல்லாம் வாய் இல்லையா? இவனுங்கதான் மனிதாபிமானம் உள்ளவனுங்களாச்சே! ஒரு கண்டண அறிக்கை லிட கூட வாய் இல்லையா? இவனுங்கள்லாம் மத சார்பற்ற பயலுங்களாச்சே!


S. Narayanan
ஆக 09, 2024 23:05

திராவிட மாடல் அரசு தமிழ் நாட்டில் உள்ள இந்துக்களையே அவர்கள் ஓட்டுக்காக மட்டுமே அலையும் போது வங்க தேசத்தில் யார் என்ன அவதி பட்டு செத்தால் எங்களுக்கு என்ன என்று தான் இருப்பார்கள். அவ்வளவு சமூக நீதி கொண்டவர்கள் திமுக ஆட்சியாளர்கள்.


Kumar Kumzi
ஆக 09, 2024 22:46

கற்கால காட்டேறிகள்ன்னு அறிவித்து வெளிநாடுகளில் அனுமதிக்க கூடாது


Vijay D Ratnam
ஆக 09, 2024 21:44

இந்த ஐ.நா பொதுச்செயலாளர் பதவி என்பது ஒரு தேவையே இல்லாத ஆணி. டம்மி போஸ்ட். ஒருத்தனும் இவரு பேச்சை கேட்கமாட்டான். சொம்மா பெஞ்சு தேக்குற வேலை. சுருக்கமா சொன்னா பருத்திவீரன் பொணந்திண்ணி கேரக்டர் மாதிரி. என்னமோ உலகமே அவரது அறிவுரையை கேட்டுப்போட்டு வேலை செய்றா மாதிரி நினைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருத்தனும் கண்டுக்கொள்ள மாட்டான். அதிகபட்சம் கருத்து சொல்வார், கண்டனம் தெரிவிப்பார் அவ்ளோதான்.


S. Narayanan
ஆக 09, 2024 21:37

ஹசினா தவறு செய்து இருந்தால் அவரை மட்டுமே தண்டிக்க வேண்டுமே தவிர அப்பாவி மக்களை தண்டிக்க யாருக்கும் உரிமை கிடையாது


raj
ஆக 09, 2024 21:36

இவர் அறிக்கை விட்டு என்ன பிரோயோஜனம்


Sivak
ஆக 09, 2024 21:22

இந்துக்களுக்கு புரிஞ்சிதா இல்லையா? ஒண்ணுக்கு ரெண்டு முறை நல்லா படிங்க ... இவனுங்களுக்கு திமுக அதிமுக பாஜக SC ST OBC MBC இதெல்லாம் ஒன்னும் தெரியாது ... முஸ்லீம் அல்லாதவர்மட்டுமே இவர்களுது குறி ... ஹிந்துக்களுக்கு அறிவு வருதா பார்ப்போம் ...


Ramesh Sargam
ஆக 09, 2024 21:00

தமிழகத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலையும் ஐ.நா. ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது. கண்டனம் தெரிவிக்கவேண்டும் திமுக அரசுக்கு.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ