உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்.,குக்கு ஆதரவு தெரிவித்த அஜர்பைஜான் இந்திய சுற்றுலா பயணியரை இழந்தது

பாக்.,குக்கு ஆதரவு தெரிவித்த அஜர்பைஜான் இந்திய சுற்றுலா பயணியரை இழந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாகு: இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், அஜர்பைஜான் நாட்டை நம் சுற்றுலா பயணியர் ஆயிரக் கணக்கானோர் தவிர்த்துள்ள புள்ளிவிபரம் வெ ளியாகி உள்ளது. ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீது ட்ரோன்களை ஏவியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5akymljv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ட்ரோன்களை வழங்கியது மேற்காசிய நாடான துருக்கி என்பது தெரிந்தது. இதையடுத்து துருக்கி செல்வதற்கு எதிராக இங்கு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் அந்நாட்டிற்கு மே மாதம் 31,000 சுற்றுலா பயணியர் சென்ற நிலையில், அது ஜூனில் 50 சதவீதம் சரிந்து 16,000 ஆக சரிந்தது. இதே போல் ஐரோப்பிய நாடான அஜர்பைஜான், இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனால், நம் சுற்றுலா பயணியர் ஆயிரக்கணக்கானோர் அஜர்பைஜான் செல்வதை தவிர்த்துள்ளனர். கடந்த 2024 ஜூனில் 28,000 இந்தியர்கள் அஜர்பைஜானுக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில், அந்நாடு பாகிஸ் தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்திய சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 28,000 ஆக இருந்த எண்ணிக்கை, தடாலடியாக இந்த ஆண்டு ஜூனி ல் 9,000 ஆகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sasikumaren
ஆக 25, 2025 05:52

இந்தியாவுக்கு எதிராக இருக்கும் நாடுகளுக்கு நேரடி விமானங்கள் செல்வதை மத்திய அரசு தடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்தியாவின் சுய பாதுகாப்பு இல்லாமல் போய் விடும்.


Iyer
ஆக 25, 2025 05:46

அரசியலை தவிர்த்து நோக்கினாலும் - இந்த 2 நாடுகளிலும் சுற்றுலா செல்ல என்ன உள்ளது ? Azerbaijaan இந்தியாவை விட பலமடங்கு Air pollution மிகுந்த நாடு துருக்கி துருக்கி க்கு சுற்றுலா செல்வதில் ஆபத்தும் உண்டு


Thravisham
ஆக 25, 2025 07:20

பாரதத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் போல் உலகில் எங்குமே இல்லை என்பது உண்மை. ஆனால் பெரும்பாலான இடங்களில் சுத்தம்/சுகாதாரம் மிகக் குறைவு.


Padmasridharan
ஆக 25, 2025 05:16

இதே போன்று மாலத்தீவிற்கும் செய்தார்கள். இந்தியர்களை சங்கிலியால் கட்டியனுப்பிய அமெரிக்காவிற்கும் செல்லாமல் இருப்பார்களா


Thravisham
ஆக 25, 2025 07:22

அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர்கள் சுற்றுலா பயணிகள் அல்லர்


Kasimani Baskaran
ஆக 25, 2025 03:59

கண்டிப்பாக அணைத்து இந்தியர்களும் அஜர்பைஜான் மற்றும் துருக்கிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.


Natarajan Ramanathan
ஆக 25, 2025 03:05

துருக்கி பயணத்தை தவிர்த்தவர்களில் நானும் ஒருவன்.


naranam
ஆக 25, 2025 02:25

அந்த ஒன்பதாயிரம் பேர்?


Ranjani
ஆக 25, 2025 01:47

நன்றி பாரத மக்களே


முக்கிய வீடியோ