உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்.,கிற்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரம் கெடு

பாக்.,கிற்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரம் கெடு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் மட்டுமே அவகாசம் உள்ளது. சிறையில் உள்ள எங்களது அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்காவிட்டால் ரயிலை வெடிக்கச்செய்வோம் என்று கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.நேற்று பாகிஸ்தானின் குடாலர் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகிலுள்ள மஷ்காப் சுரங்கப்பாதை வழியாக ஒன்பது பெட்டிகளில் 425 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது பலூன் விடுதலை ராணுவம் என்ற அமைப்பை சேர்ந்த போராளி குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சிறைப்பிடித்தனர். இதில் 155 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பெட்டிகளில் உள்ள 250 பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f4rk3ln3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள சில பயணிகளை மனித வெடிகுண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வைத்துள்ளதாக தகவலால் ராணுவத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.இந்நிலையில், 48 நேரத்திற்குள் பாகிஸ்தான் சிறையில் உள்ள அவர்களது அமைப்பை சேர்ந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், நிறைவேற்ற தவறினால் ரயிலை வெடிக்கச்செய்வோம். என்று கிளர்ச்சியாளர்கள் கெடு விதித்துள்ளதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கிளர்ச்சியாளர்கள் கெடு:'இப்போது, ​​ஒரு நாள் கடந்துவிட்டது, பாகிஸ்தான் அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் மட்டுமே உள்ளது. கொடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கைக்குள் கைதிகள் பரிமாற்றத்தில் முன்னேற்றம் இல்லை என்றால், அனைத்து பணயக்கைதிகளும் பலுச் தேசிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அங்கு, அவர்கள் அரசு அட்டூழியங்கள், காலனித்துவ ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை, சுரண்டல் மற்றும் பலுசிஸ்தானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரிக்கப்படுவார்கள்,' இவ்வாறு கிளர்ச்சியாளர்கள் கெடு விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kannan Chandran
மார் 12, 2025 23:44

இந்த லட்சணத்துல அவனுங்களுக்கு காஷ்மீர் வேற வேணுமாம்.


A1Suresh
மார் 12, 2025 23:13

கொஞ்சம் விட்டால் பலூசிஸ்தான் மாகாண தலைநகரம் குவெட்டா நகரையே கைப்பற்ற நடவடிக்கை நடக்கிறதாம். பிணைக்கைதிகள் சிலர் உடலிலே குண்டுகளை கட்டி மனிதவெடிகுண்டுகள் ஆக்கி உள்ளனராம் பலூசி விடுதலை இயக்கத்தினர்.


ராமகிருஷ்ணன்
மார் 12, 2025 21:41

எது எப்படியோ உலகில் முஸ்லிம்களின் மக்கள் தொகை குறைந்தால் நல்லது தான். நடப்பது நடக்கட்டும்.


Appa V
மார் 12, 2025 21:10

ராணுவ வீரர்களோ அவர்கள் குடும்பத்தினரோ சாவதை பற்றி பாகிஸ்தான் ராணுவம் கவலைப்பட்டதில்லை ..ஆபரேஷன் சக்ஸஸ்புல் ..பேஷண்ட் டைய்டு ...அது தான் பாலிசி


A1Suresh
மார் 12, 2025 21:02

திருமா, கனிமொழி, வைகோ, ஆ.ராசா தலைமையில் தமிழக எம்பிக்களை அனுப்பினால் பலூசி இன மக்களை மனந்திருத்த வைத்து பாகிஸ்தானுடன் ஒன்றிணைந்து வாழவைப்பார்கள்.


M Ramachandran
மார் 12, 2025 20:59

தீ விர வாதிகலிய்ய நம் மீது ஏவும் போது இனித்தது. இப்போ அதே பாணியில் உள்நாட்டில் கிளர்ச்சியாளர்கள். வினய்யய் விதித்த ISI அதை அறுவடைய்ய எரிகிறது. நடக்க்கட்டும்...


MUTHU
மார் 12, 2025 20:50

எதிர்கால தீவிரவாத தாக்குதல் என்ன மாதிரியான பரிணாமம் பெற்று வரும் என்பதன் ஒரு சாம்பிள் இது. ஒரு சில நபர்கள் ஒரு நாட்டினையே ஸ்தம்பிக்க செய்ய முடியும் என்பதன் உதாரணம் இது.


Ganapathy
மார் 12, 2025 20:46

இது பாஜக சங்கிகளின் சதி...அண்ணாவின் போர்வாள்களையும் இரும்புக்கையையும் ரமதான் மாதத்தில் கசக்கப்படும் துலுக்ஸ்களை திராவிட அரசு விடுவிக்கும்...


A1Suresh
மார் 12, 2025 20:45

படிப்பறிவற்ற ,ஏழைகளான பலூசி என்னும் பழங்குடி மக்கள் வாழ்வது பலூசிஸ்தான் ஆகும். இது ஆரம்பத்திலிருந்தே இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. இன்று தனிநாடு கேட்கின்றனர். இவர்களை நவநாகரீக, கல்விகற்ற, பணக்கார பஞ்சாப் முஸ்லிம்கள் மதிப்பதில்லை. இது மட்டுமல்ல. கைபர் பக்தூன்வா எனும் மாகாணத்தில் ஆப்கானிய பழங்குடிகளான படானியர்களின் பகுதியாகும் இதுவும் ஆப்கானிஸ்தானுடன் செல்ல விரும்புகிறது. ஆக 4 மாகாணங்களில் சரி பாதியை பாகிஸ்தான் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தமிழன்
மார் 12, 2025 20:36

இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்.இந்த நிலையை பார்க்கவே மனதுக்கு இதமா இருக்கு.இன்னும் மோசமான நிலையை எதிர்பார்க்கிறேன்.உப்பை திண்ணவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் .நாடே நாசமாக போவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.10 நாட்களுக்கு முன்பு ஒருத்தன் பின்னால் முக்கிக் கொண்டு மேசையை உடைத்து ஊழையிட்டான் இந்தியாவை அழித்து தன் நாட்டை முன்னேற்றி காட்டுவேன் இல்லையென்றால் தன் பெயரை மாற்றிக் கொள்கிறேன் என்றான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை