உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷேக் ஹசீனா பேச்சுக்கு எதிர்ப்பு: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்

ஷேக் ஹசீனா பேச்சுக்கு எதிர்ப்பு: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தன்னை கொல்ல முயன்றதாக, இந்தியாவில் தங்கி உள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வங்கதேச வெளியுறவு அமைச்சகம், அந்நாட்டிற்கான இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரை, விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு கூறியுள்ளது. இச்சூழ்நிலையில், அந்நாட்டின் முன்னாள் அதிபரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டை கும்பல் ஒன்று இடித்து சேதப்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஷேக் ஹசீனா பேசியதாவது: வங்கதேசத்தில் அழிவுக்கான சகாப்தம் துவங்கி உள்ளது. தற்போது நாட்டில் குழப்ப நிலை நிலவி வருகிறது. உலகம் முழுவதும் வளர்ச்சி மாதிரிக்கான முன் மாதிரியாக இருந்த வங்கதேசம் தற்போது பயங்கரவாதிகள் மற்றும் போராட்டக்காரர்களின் புகலிடமாக மாறி உள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, அரசியலமைப்புக்கு எதிரானது. பணத்தை பயன்படுத்தியும், நமது நாட்டு மக்களின் சடலங்கள் மேல் நடந்தும் ஆட்சியை பிடித்து உள்ளது. என்னையும், எனது சகோதரியையும் கொலை செய்ய முகமது யூனுஸ் சதி செய்கிறார். இவ்வாறு ஷேக் ஹசீனா பேசியிருந்தார். இந்த பேச்சு, வங்கதேசத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.இது முடிந்த ஒரு சில மணி நேரங்களில் வங்கதேசத்திற்கான இந்திய தூதரக அதிகாரிக்கு, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Tetra
பிப் 07, 2025 11:22

யூனூஸ் ஒரு கமலா ஹாரிஸ் ஏஜன்ட். ஓசில அதிபர். எவ்வளக்கு எவ்வளவு இந்நாள் நமக்கு தீங்கிழைக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு பங்களா தேஷ் பொங்கல் தேஷ் ஆகிடும்


Karthik
பிப் 07, 2025 10:28

அணையபோற விளக்கு மிகவும் பிரகாசமாக எரியுமாம். நடப்பதை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது.


Ram
பிப் 07, 2025 08:16

புத்தி அவ்வளவுதான், பட்டால் தானாக புரியும்


Kasimani Baskaran
பிப் 07, 2025 07:54

புரட்சி என்று ஜனநாயக கொலை செய்து ஆட்சியை பிடித்து நாறடிக்கிறார்கள்


நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2025 07:14

யூனுஸ் என்ற பெயருக்கு பதிலாக yunuch என்று படிக்கலாம்


Dharmavaan
பிப் 07, 2025 06:54

மூர்க்கன்கள் பாகிஸ்தான போல் சோத்துக்கு திண்டாடினால்தான் புத்தி வரும். அழிவுகாலம் அவன்களுக்கு


RAJ
பிப் 06, 2025 22:44

கண்டிப்பா செய்வார் .. அதனால நீ சொம்பை தூக்கறத விடு..


subramanian
பிப் 07, 2025 06:55

பொய் பெயரில் பதிவு போடுகிறாய்.


கிஜன்
பிப் 06, 2025 22:16

நோபல் பரிசு வென்ற 84 வயது பெரியவர் அப்படியெல்லாம் செய்வாரா .... அவரை முகமூடியாக வைத்து பழமைவாதிகள் ஆடுகிறார்கள் என்று தெரிகிறது .... நல்ல வளர்ச்சிப்பாதையில் வங்கதேசத்தை கொண்டுவந்தீர்கள் .... யார் கண் பட்டதோ ... காசா நிலைமை வராமல் இருந்தால் நல்லது ... இல்லெங்கில் அங்கும் ரிவியேரா ஆப் ஈஸ்ட் வந்துவிடும் ....


subramanian
பிப் 07, 2025 06:58

கிஜன், 84 வயது தீவிரவாதி பைத்தியம். இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறான்? அவனை ஒழிக்க ஸ்கெட்ச் ரெடி.


நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2025 07:16

அந்த வயசில் உள்ளவர்கள் என்னை கொல்லுறாங்க என்று டப்பிங் வாய்ஸ் கொடுத்ததும் நினைவில் உள்ளது