உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷேக் ஹசீனாவை எங்க நாட்டுக்கு திருப்பி அனுப்புங்க; இந்தியாவிடம் கேட்கிறது வங்கதேசம்

ஷேக் ஹசீனாவை எங்க நாட்டுக்கு திருப்பி அனுப்புங்க; இந்தியாவிடம் கேட்கிறது வங்கதேசம்

டாக்கா: 'ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்' என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.இட ஒதுக்கீடு தொடர்பாக, வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். பிழைத்தால் போதும் என்ற ரீதியில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் அமைதியை கொண்டு வரும் முயற்சியாக இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4zisvun5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஹசீனா ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பாக, அந்நாட்டு கோர்ட்டில் விசாரணை தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக, மாணவர் போராட்டத்தின் போது, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை நடந்த குற்றங்களின் அடிப்படையில் ஹசீனா மற்றும் 9 பேர் மீது விசாரணை நடத்தப்படுகிறது.

நாடு கடத்துங்க

இந்த வழக்கில் விசாரிப்பதற்காக, ஷேக் ஹசீனா தேவைப்படுவர்; எனவே, அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை வழக்கறிஞர் எம்.டி தாஜுல் இஸ்லாம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்வோம்.

ஆலோசித்து முடிவு

புதிய வழக்குகளை விசாரிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்டு தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

கோரிக்கை

நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பிறகு, முந்தைய அரசு நியமித்த வழக்குரைஞர் குழு மற்றும் விசாரணை அமைப்பு பதவி விலகி விட்டனர். புதிய நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்களை நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரியுள்ளனர்.

1,000 பேர் பலி

வங்கதேசத்தில் நடந்த வன்முறையில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று இடைக்கால அரசாங்கத்தின் சுகாதார ஆலோசகர் நூர்ஜஹான் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 09, 2024 12:55

அவருடன் மேற்கு வங்காளம் மூலமாக ஊடுருவி தமிழகம் கேரளா வந்துள்ள அனைத்து பங்காளதேசிகளையும் திருப்பி அனுப்பி எப்படி இந்தியாவிற்குள் ஊடுருவினீர்கள் என்று விசாரணை நடத்தவும். ஊடுருவ இந்தியாவில் யார் யார் உதவினார்கள் எப்படி உதவினார்கள் என்று விசாரனை செய்து கண்டுபிடித்து கூறவும்.


Narayanan
செப் 09, 2024 12:22

மாணவர்களை ஷேக் ஹசீனாவின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க சொல்லுங்கள் .விரட்டிவிட்டு அவர்கள் வீட்டை சூறை ஆடிவிட்டார்கள் . மாணவர்கள் செய்ய கூடிய வேலையா இது ? இப்போ வந்தால் எங்கு இருப்பார் ? நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தலைவரை உதாசீன படுத்திய மாணவர்களை மன்னிக்க முடியாது .


Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 11:12

சுய உதவி குழு திட்டத்தின் தந்தை சாக்கடையில் விழுந்து புரள்கிறார் இப்போது


தமிழ்வேள்
செப் 09, 2024 10:46

ஆடு மாடுகளை கூட உருப்படியாக விட்டுவைக்காத


ram
செப் 09, 2024 10:30

இவனுக இடஒதுக்கீடு போராட்டம் என்று ஹிந்து மக்களை ஒழித்துவிட்டார்கள், இதெற்கெல்லாம் முக்கிய ஆட்கள் காங்கிரஸ், இவனுக தேவையில்லாமல் போய் பாகிஸ்தானிடம் இருந்து இவனுங்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததின் விளைவு. காங்கிரஸ் வீட்டுக்கு, நாட்டுக்கு, ஹிந்து மக்களுக்கு கேடு.


rasaa
செப் 09, 2024 09:55

சரி. அவருடன் இந்தியாவில் குடியேறியுள்ள அனைத்து வங்க தேசம், ரோஸிங்கியத்தினரையும் அனுப்பி வைக்கவும். ஒருவர் கூட இங்கு இருக்கக்கூடாது. நமது இந்துக்கள் அனைவரையும் இங்கு அழைத்துக்கொள்ளலாம்.


Saai Sundharamurthy AVK
செப் 09, 2024 09:30

தீவிரவாதிகளையே அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மிடம் ஒப்படைப்பதில்லை. அந்த நாடுகளை யாரும் கேள்வியும் கேட்பதில்லை. ஷேக் ஹசினா தானாகவே வந்து இந்தியாவில் தங்கியிருக்கிறார். அவரை இந்தியா எப்படி வங்கதேசத்திடம் ஒப்படைக்க முடியும் ???? அவராகவே வந்தால் வங்கதேசம் பிடித்துக் கொள்ளலாம் என்று ராகுல்காந்தியிடம் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், ராகுல் காந்தியின் பேச்சை கேட்டு தானே முகம்மது யூனிஸ் ஆடுகிறார். இவருக்கெல்லாம் யார் நோபல் பரிசை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை ????


sankaranarayanan
செப் 09, 2024 08:39

முஜுபூர் ரஹ்மானு நேர்ந்த கதிதான் அவருடைய மனைவிக்கும் நேரும்போலத்தான் உள்ளது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது


veeramani hariharan
செப் 09, 2024 09:26

அவருடைய மகள் ஆவார் மனைவி அல்ல


Nandakumar Naidu.
செப் 09, 2024 08:26

ஏன் தூக்கில் போடவா? உங்களின் பரம்பரை புத்தியைப்பற்றி உலகத்திற்கே தெரியும். நீங்கள் எல்லாம் மத வெறி பிடித்த ஓநாய்கள்.


Matt P
செப் 09, 2024 07:58

அவரை இந்தியா புடிச்சா வைச்சிருக்குது அவங்களா பங்களாதேசுக்கு போறேன்னு சொன்னாலும் தடுக்க மாட்டாங்க. தலாய் லாமா கூட இந்தியாவில் தான் வாழ்கிறார். போர் போராட்டம் என்ற பெயரில் மக்கள் சாவு எங்கும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசாலும் மக்கள் இழப்பு நடந்தது.எதிராளிகளாலும் நடந்திருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களே சொல்லியிருக்கிறார்கள் காந்தியின் அஹிம்சையை கொள்கையை அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்று. காந்தியினால் அமெரிக்காவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் மக்கள் இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் அமையவேண்டும் என்று ஆள்பவர்களும் எதிராளிகளை நினைத்தால் சரி. ஆயிரம் பேர் இவரால் அங்கு மடிந்தார்கள் என்றால் வருந்தத்தக்கது தான்.


visu
செப் 09, 2024 09:26

அங்கு நியாயமான தேர்தல் நடத்தி அதில் அவாமி லீக்கும் கலந்து கொண்டு உலக பார்வையாளர்கள் முன் தேர்தல் நடத்தி அதில் வெல்லும் ஜனநாயக ஆட்சி கேட்டால் அவரை நாட்டுக்கு அனுப்புவதுதான் சரி


சமீபத்திய செய்தி