உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு: அவாமி லீக் கட்சி தலைவர் கைது

வங்கதேச பார்லிமென்ட் கலைப்பு: அவாமி லீக் கட்சி தலைவர் கைது

டாக்கா: வங்கதேச பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பார்லிமென்ட்டை கலைத்து அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டு உள்ளார்.வங்கதேசத்தில் ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறினார். அங்கு ஆட்சியை ராணுவம் கையில் எடுத்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6c9rho4t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அந்நாட்டு பார்லிமென்டை கலைத்த அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜூலை 1 முதல் ஆக.,5 வரை கைதான அனைவரையும் விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் விடுதலை

ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இந்த முன்னாள் பிரதமர் கலிதாஜியாவை விடுதலை செய்ய அதிபர் நேற்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கைது

ஹசீனா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், அவாமி லீக் கட்சி தலைவருமான ஜூனைத் அஹமதுவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rsudarsan lic
ஆக 06, 2024 22:02

Bangadesh to be merged with India forever


Ramesh Sargam
ஆக 06, 2024 20:14

வங்கதேசத்தில் நடக்கும் விஷயங்களை மேற்குவங்க முதல்வர் மமதா பார்த்துக் கொண்டிருக்கிறாரா? கலவரத்தில் இருந்து தப்பி தன்னுடைய மாநிலத்துக்கு வருபவர்களை அரவணைக்க தயாராகிவிட்டாரா? ஏன் மமதா இதுவரை கலவரத்தைப்பற்றி ஒரு வார்த்தைகூட கூறவில்லை?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ