உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போரில் புடின் வெற்றி பெற மாட்டார்; உறுதியாக சொல்கிறார் ஜோ பைடன்

உக்ரைன் போரில் புடின் வெற்றி பெற மாட்டார்; உறுதியாக சொல்கிறார் ஜோ பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடினின் போர் அச்சுறுத்தல் குறித்து நிருபர்கள் கேள்விக்கு, 'அமைதியாக இருங்கள்' என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டிப்புடன் தெரிவித்தார்.உக்ரைன் மீது நீண்ட நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் இதற்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. 'நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதித்தால், அது மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம். நாங்களும் உரிய பதிலடியை கொடுப்போம்' என ரஷ்யா அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

பைடன் கண்டிப்பு

இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களை சந்தித்தனர். புடின் போர் அச்சுறுத்தல் பற்றி கேள்வி எழுப்பிய நிருபருக்கு, 'நான் பேசும் வரை அமைதியாக இருங்கள் என்று நான் சொல்கிறேன். சரியா?. நல்ல யோசனையா? என பைடன் கோபத்துடன் பதில் அளித்தார்.

மீண்டும் கேள்வி

ஆனாலும், நிருபர் தனது கேள்வியை தொடர்ந்து எழுப்பியதால், பைடன் அவரை மீண்டும் கண்டித்தார், 'நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நான் இங்கே ஒரு அறிக்கையை வெளியிடப் போகிறேன் சரியா? என்றார். புடினைப் பற்றி நான் அதிகம் யோசித்து பார்த்தது இல்லை. உக்ரைனுடனான போரில் புடின் வெற்றிபெற மாட்டார் என்பது தெளிவாகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனை காக்கும் வகையில் உதவ நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SUBRAMANIAN P
செப் 14, 2024 14:12

இவர் புடினை தூண்டி விடுறேன்.. போர் முடியறதுல இவருக்கு விருப்பம் இல்ல.. அமெரிக்கனை நம்பாதே.


Anand
செப் 14, 2024 12:08

உன்னோட பதவியே தள்ளாடுது, நீ அடுத்தவருக்கு ஆருடம் கூறுகிறாய்.


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2024 11:00

மீண்டும் மீண்டும் எழுதுகிறேன் , வெள்ளையர்களின் ஆட்டம் முடியும் நாள் தான் உலகின் விடியல் காலம் இப்பவே பிரிட்டிஷ் காரனுங்க அடங்கிட்டானுங்க , இப்போதான் அமெரிக்கணும் , சீனனும் அடங்குவாங்களோ ?


M Ramachandran
செப் 14, 2024 10:56

அட போயா உன்னையெ நம்பாமெ கல்தா குடுக்குராங்கா. நீ போய் புடீனுக்கு சாபம் கொடுக்குறே


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 14, 2024 10:54

அமெரிக்காவும் இதுவரை ஈடுபட்ட நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த போரிலும் வெற்றி பெற்றதில்லை. இதே நிலை தான் உக்ரைனிலும் அமெரிக்காவுக்கு. அவர்கள் தயாரித்த ஆயுதங்களின் வலிமையை சோதனை களத்தில் சோதித்து பார்ப்பதை விட நேரடி யுத்த களத்தில் சோதனை செய்யவே இது போன்ற போர்களில் அமெரிக்கா ஈடுபடுகிறது. மற்றபடி அமெரிக்காவுக்கு எந்த நாட்டிற்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. அமெரிக்கவை ஒரு தாதாவாக சித்தரிக்கவே அமெரிக்கா எப்பொழுதும் மற்ற நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்ளும்.


Ganapathy
செப் 14, 2024 10:44

துரைமுருகனோட காமெடி லுக் தாங்கல படத்துல..


சமீபத்திய செய்தி