உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மக்களை கண்டு அஞ்சும் ஈரான் அரசு; வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல் பிரதமர்!

மக்களை கண்டு அஞ்சும் ஈரான் அரசு; வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல் பிரதமர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: 'மக்களை கண்டு, ஈரான் அரசு அஞ்சி நடுங்குகிறது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேல் மோதல் நடக்கிறது. மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4ug1935x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் மக்களுக்கு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: ஈரானின் கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் ஒன்று இருக்கிறது. அது நீங்கள் தான்.. ஈரான் மக்கள். அதனால் தான் அவர்கள் உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளைத் தடுக்கவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இஸ்ரேல், ஈரானுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ சர்வதேச அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Madras Madra
நவ 13, 2024 10:52

இசுலாம் மத சார்புள்ள நாடு ஈரான் அதனாலேயே பெண்களை மிக கேவலமாக நடத்துகிறது இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வாக்களிக்கும்போது


Apposthalan samlin
நவ 13, 2024 10:10

nethan யாகூ சொன்னது முற்றிலும் உண்மை ஈரான் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடு படுகிறார்கள் ஈரான் இல் கான்ட்ராக்ட் basis இல் மனைவி கிடைக்கும் கொமேனிய வீழ்த்தி அந்த நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்க வேண்டும் ஈரான் வளமான நாடு மொத பணமும் தீவிரவாதிகளுக்கு தான் போகிறது .அமெரிக்கா இஸ்ரேல் mattum தான் விடுதலை வாங்கி கொடுக்க முடியும்


பேசும் தமிழன்
நவ 13, 2024 08:01

இஸ்ரேல் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து தாக்குதல் நடத்தி...... ஈரான் நாட்டு மக்களுக்கு விடுதலை பெற்று தரலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை