உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இது, நீதி வழங்கும் நடவடிக்கை... இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஜோ பைடன்

இது, நீதி வழங்கும் நடவடிக்கை... இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஜோ பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை என அமெரிக்க அதிபர் பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, தங்களது விமானப்படை ஏவுகணையால் தாக்கி கொன்றது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bg6ykx7y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனான் குடிமக்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை. ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் ஈரானிய ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கிறது. இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை ஜோ பைடன் வெளிப்படுத்தினார்.

ஐ.நா., கவலை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் பெய்ரூட்டில் நடந்த தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வன்முறை தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இதனால் லெபனான் மக்களும், இஸ்ரேலிய மக்களும் ஒரு முழுமையான போரைத் தாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
செப் 29, 2024 20:53

நீதி வழங்கல்.இல்லை. பழிக்குப் பழி. ரெண்டு பக்கமும் தொடர்ந்து நடக்கும்.


தேச பித்தன்
செப் 29, 2024 20:47

தீவிரவாதி பண்னூன் விசயத்திலும் இதே மாதிரி செயல்படுவீங்களா? மிஸ்டர் பைடன். பண்னூன் விசயத்தில் உங்கள் செயல்பாடு, உங்களுக்கு வியட்நாம் மற்றும் ஆப்கனில் ஏற்பட்ட முடிவு தான். பாரதம் நல்லா இருந்தால் உலகமே நல்லா இருக்கும்.


M Ramachandran
செப் 29, 2024 19:28

தீவீர வாதிகள் முக்கியா ஆலோசனைக்காக ஒட்டக பிரியாணி சாப்பிட்டு பிறகு ஏப்பம் விட்டு யோராசிக்க லாம் என்று இருந்தார்கள் இந்த இஸ்ரேல் காரன் பிரியாணி சாப்பிட முடியாமல் குண்டு வீசி கெடுத்துட்டானே. சரி நாம் புதுங்கு குழியிலேயே காலத்தைய்ய தள்ளிக்கொண்டு எலி போல் அப்போது கப்போவது குண்டு வைத்து கொண்டு அதை காரணாமாக காட்டி பிற அரபு நாடுகளில் பிச்சை எடுத்து மதத்தின் பெயர் சொல்லி இளஞ்சர்களை உசுப்பி காலம் நடத்தி கொள்ள வேண்டியது தான்


sankar
செப் 29, 2024 10:12

காட்டிக்கொகெடுப்பது -அமெரிக்காவின் தலையாய கொள்கை - அன்றிலிருந்து இன்றுவரை, இனியும்


பேசும் தமிழன்
செப் 29, 2024 13:39

அவனை ஏன் இழுக்கிற.... நம்ம ஆட்கள் பிடுங்குவது அனைத்தும் தேவையில்லாத ஆணிகள் தான்..... செய்வது அனைத்தும் தீவிரவாதத் செயல்கள் தான்.... அதனை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.


GMM
செப் 29, 2024 09:57

அமெரிக்கவின் இஸ்ரேல் ஆதரவு நியமானது. இனி அணு ஆயுதங்களை செயல் இழக்க நுட்பம் காண வேண்டும். அல்லது தீவிரவாதிகள் நாட்டின் உள் வெடிக்க செய்ய வேண்டும். சீனா, ரஸ்யா, வட கொரியா தீவிரவாதிகளுடன் விளையாடுகின்றனர். ஆபத்து உங்களுக்கு உறுதி. இந்திய தன் இழந்த பகுதிகளை மீட்க மேலும் இடங்களை இழக்காமல் இருக்க இஸ்ரேல் போன்ற தனி ராணுவ பிரிவை உருவாக்க வேண்டும். மத்திய அரசு மாநில நிர்வாகம் வருவாயில் சிறு பகுதி ஒதுக்க வேண்டும். வரிவிலக்குடன் கூடிய நன்கொடை பெறவேண்டும். 21 ம் நூற்றாண்டு அமைதி பெற முடியும்.


karupanasamy
செப் 29, 2024 09:54

பாக்கியையும் பங்களாவையும் இதேமுறையில் கையாளவேண்டும்.


Venkateswaran Rajaram
செப் 29, 2024 09:12

அப்ப பயங்கரவாதத்த மட்டும் உலக மக்கள் தாங்கிக்கனும் என்ன நாடா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை