உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அய்யய்யோ, அச்சுறுத்தல்... அலறித் துடிக்கிறார் டிரம்ப்; யாரைச் சொல்றார்னு பாருங்க!

அய்யய்யோ, அச்சுறுத்தல்... அலறித் துடிக்கிறார் டிரம்ப்; யாரைச் சொல்றார்னு பாருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ஈரானால் என் உயிருக்கு பெரிய அச்சுறுத்தல் உள்ளது' என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். கடந்த செப்டம்பர் 16ம் தேதி, 2வது முறையாக புளோரிடா மாகாணத்தில் தனது வீட்டில் இருக்கும் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டிற்கு அருகிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.

ஆபத்து இருக்குது!

தொடர்ந்து நடந்து வரும் கொலை முயற்சி தாக்குதலில், இருந்து கடவுள் தான் என்னை காப்பாற்றினார் என அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று(செப்.,25) அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரானால் எனது உயிருக்கு பெரிய அச்சுறுத்தல். ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட முயற்சி கை கொடுக்கவில்லை. ஆனால் மீண்டும் முயல்வர். ஒட்டுமொத்த அமெரிக்க ராணுவமும் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது. யாருக்கும் நல்ல சூழ்நிலை இல்லை. இதுவரை நான் பார்க்காத அளவுக்கு என்னைச் சுற்றி துப்பாக்கிகளும், ஆயுதங்களும் உள்ளன' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அமெரிக்கன்
செப் 25, 2024 17:53

இவர் அதிபரா இருந்த போது டிரோன் தாக்குதல் மூலம் இரானிய தளபதி சுலைமானைக்.கொன்றது யாருக்கு மறந்தாலும் இரானுக்கு மறக்காது. அடுத்தவன் செத்தால் ஆனந்தம். தனக்கு வந்தால் ஆவேசம்.


Sivagiri
செப் 25, 2024 13:54

என்னதான் உள்நாட்டில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் எல்லா அமெரிக்காக்காரனும் , சொந்த நாட்டை பெருமையாகத்தான் பார்க்கிறான் . . . உள்ளூர் அரசியல் எதிரிகளையும் அமெரிக்காக்காரனாகத்தான் பார்க்கிறான் , எதற்காகவும் சொந்த நாட்டை விட்டு கொடுக்கமாட்டேன் . . . ஆனால் இந்தியாவில் அதுவும் காங்கிரஸ் கம்பெனி மட்டும் அரசியலுக்காக , சொந்த பிரச்சினைக்காக , நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி எதிரிகளுக்கு காட்டி கொடுத்து , தானும் குழிக்குள் விழும் புத்தியை கொண்டுள்ளது . .


KRISH BHARADWAJ
செப் 25, 2024 14:25

India is unsafe, Hinduism is going to face a big danger is a huge psychic campaign at will degenerate the confidence and strength of a nation.


Ramesh Sargam
செப் 25, 2024 13:27

நேற்று இவரை எதிர்த்து போட்டியிடும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அலுவலகத்தில் கூட துப்பாக்கி சூடு. ஆக, எவனோ அமெரிக்காவை பிடிக்காதவன் செய்யும் செயல்தான் இது. அவன் டிரம்புக்கும் எதிரி, கமலாவுக்கு எதிரி, ஒட்டுமொத்த அமெரிக்க நாட்டிற்கும் எதிரி.


சமீபத்திய செய்தி