உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரியாத்தில் மரணம் அடைந்த சுவாமிநாதன் உடல் தாயகம் அனுப்பி வைப்பு

ரியாத்தில் மரணம் அடைந்த சுவாமிநாதன் உடல் தாயகம் அனுப்பி வைப்பு

ஜெத்தா: செங்கல்பட்டு மாவட்டம் வேல்ந்துருகன் காலனி கீழ்கட்டளை சேர்ந்த சாமிநாதன் ராஜு என்கிற சகோதரர் சவுதி அரேபியா ரியாத்தில் பணிபுரிந்து வந்தார் இவர் கடந்த 09-08-2025 சனிக்கிழமை அன்று நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இந்த தகவலை இறந்து போன சாமிநாதன் ராஜுவின் உறவினர்கள் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மத், சமூக நலத்துறை செயலாளர் கொடிபள்ளம் சாதிக் பாஷா, ரியாத் மண்டல சமூக நலத்துறை துணை செயலாளர் அய்யம்பேட்டை கட்டுவா அஜ்மி ஆகியோர் விரைந்து செயல்பட்டு இந்திய தூதரகம் மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனத்தின் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து ரியாத் விமான நிலையத்தில் இருந்து இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு செப்- 9 அன்று காலை அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு சென்றடைந்த சுவாமிநாதன் ராஜு உடலை மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தாம்பரம் எம்.யாகூப், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே .ஜாகிர் உசேன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர்கள் சுவாமிநாதன் ராஜு உடலை பெற்று ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் எஸ்.எஸ். அப்துல் ரகுமான் அவர்கள் அவரது சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளையில் இருக்கக்கூடிய அவர்களுடைய இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர். சுவாமிநாதன் ராஜு உடலைப் பெற்றுக் கொண்ட அவர்களுடைய உறவினர்கள் இறந்த உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.இப்பணியில் சமூக நலத்துறை துணை செயலாளர் வல்லம் சையத் அலி மண்டல துணைச் செயலாளர் ஆஷிக் இக்பால் உள்ளிட்ட பலரும் துணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sesh
செப் 13, 2025 10:13

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்றி நன்றி நன்றி


பிரேம்ஜி
செப் 11, 2025 12:28

ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்! உடலை இங்கு கொண்டு வர ஒத்துழைப்பு நல்கிய எல்லோருக்கும் நன்றி!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை