உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., விமானப்படை தளங்களை தாக்கிய பிரமோஸ் ஏவுகணை: ஒப்புக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்

பாக்., விமானப்படை தளங்களை தாக்கிய பிரமோஸ் ஏவுகணை: ஒப்புக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது தங்கள் நாட்டு விமானப்படை தளங்கள் மீது பிரமோஸ் ஏவுகணை மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டு உள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவை நோக்கி ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது. அது அனைத்தையும் இந்தியா முறியடித்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது நமது நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன பாகிஸ்தான், போரை நிறுத்தும்படி இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ.,விடம் கெஞ்சியது. இதனையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aurlhgjf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், இந்த மோதலில் வெற்றி பெற்றுவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள், ராணுவத்தினர் பொய் பிரசாரங்களை அவிழ்த்துவிட்டனர். பொய்யை உண்மையாக்க வேண்டும் என்பதற்காக ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. இந்தியாவின் விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கதை கட்டியது. ஆனால், இதனை இந்தியா ஆதாரங்களை மேற்க்கோள் காட்டி முறியடித்தது.இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: மே 9 -10ம் தேதி இரவுகளில் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என முடிவு செய்தோம். காலை 4:30 மணிக்கு பிறகு தொழுகைக்கு பிறகு தாக்குதல் நடத்துவது என படைகள் தயாராகி வந்தன. ஆனால், அதற்கு முன்னர், பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிகாலை என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

veeramani
மே 30, 2025 19:26

பாகிஸ்தானின் பொய் புரட்டு தளபதி ஆஸிம் முனிராய் விரைவில் போட்டுத்தள்ளவேண்டும். இந்த முட்டாளினால் தான் தீவிரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான் உள்ளது


chinnamanibalan
மே 30, 2025 10:46

பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் கொண்ட பாகிஸ்தான் ஆட்சியாளர்கள், போரில் தாங்கள் வென்றதாக பாகிஸ்தான் மக்களை நம்ப வைத்தனர். இங்கே உள்ள பாகிஸ்தான் கைக்கூலிகளும், சில செய்தி ஊடகங்களும் அதற்கு ஜால்ரா போட்டன. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் மட்டும் என்பது நம் முன்னோர்கள் மொழி. தற்போது பாகிஸ்தானின் பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் மெல்ல மெல்ல வெளியே வர ஆரம்பித்து உள்ளது.


ALWAR
மே 30, 2025 05:21

இந்தியாவிற்கு பயந்து முனீர் தனது குடும்பத்தை வெளிநாட்டுக்கு அனுப்பிய வீரதீர செயலுக்காக ,பதுங்கு குழியை விட்டு வெளியே வராமல் இருந்ததற்காகவும் பெய்ல்ட் மார்ஷல் கொடுத்து இருக்கனும் . இவனால் பில்ட் மார்ஷல் பட்டத்திற்கு அவமானம் . கட்ட விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேக்குது


V K
மே 30, 2025 02:20

என்ன பாதியில் நிறுத்திவிட்ட முழுசா சொல்லவும் பிறகு என்ன நடந்தது சொல்லு பெருசு


சோலை பார்த்தி
மே 29, 2025 22:37

அது பிரமோஸ்... சரி.... இன்னும் எங்க கிட்ட நிறைய இருக்கு...


Ramesh Sargam
மே 29, 2025 22:02

அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், உண்மை அதுதான்.


bogu
மே 29, 2025 21:28

இந்த விசயத்தை தயவுசெய்து உங்க ஏஜென்ட் பப்புவிடம் சொல்லுங்கள்


புதிய வீடியோ